ராமதாஸ் இல்லாத போது இரவோடு இரவாக அன்புமணி பார்த்த வேலை.. பாமகவில் வெடிக்கும் அடுத்த பூகம்பம்..!

By Nanthini on ஆடி 11, 2025

Spread the love

பாமகவில் அப்பா மகன் மோதல் நாளுக்கு நாள் முற்றி வரும் நிலையில் கும்பகோணத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்க ராமதாஸ் சென்று இருந்தார். இப்படியான நிலையில் திருமண விழா ஒன்றில் பங்கேற்க நேற்று திண்டிவனம் வந்த அன்புமணி திடீரென்று தைலாபுரம் தோட்டத்திற்கு சென்று அங்கு தனது தாயார் சரஸ்வதியை சந்தித்து சுமார் 45 நிமிடங்களுக்கு மேல் பேசியுள்ளார். அப்போது ராமதாஸ் அங்கு இல்லை. தனக்கு எதிராக தொடர்ந்து ராமதாஸ் செயல்பட்டு வருவது பற்றியும் தன் பெயரை பயன்படுத்தக்கூடாது எனக் கூறியது குறித்தும் வேதனையை அன்புமணி வெளிப்படுத்தியதாகவும் அவருடைய தாய் சமாதானப்படுத்தியதாகவும் கூறப்படுகின்றது.

இதனிடையே கடந்த எட்டாம் தேதி திண்டிவனம் அருகே ஓமந்தூரில் ராமதாஸ் நடத்திய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க முன்னாள் மத்திய அமைச்சர் ஏ கே மூர்த்தி, சென்னையில் அன்புமணி நடத்திய நடைபயணம் குறித்து ஆலோசனை கூட்டத்திலும் பங்கேற்றார். இரண்டே நாளில் அவர் அணி மாறியது பாமகவுக்குள் பரபரப்பாக பேசப்படுகின்றது. மேலும் அன்புமணி தனது தாயாரை சந்தித்து பேசியதற்கு பின்னால் ஏதாவது அரசியல் ரகசியம் ஒளிந்திருக்குமா என்ற குழப்பமும் நிலவுகிறது.