பாமகவில் கடந்த சில மாதங்களாகவே அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே சில முரண்பாடுகள் இருந்து வரும் நிலையில் கட்சி யார் தலைமையில் நடைபெறும் என்ற குழப்பம் நிர்வாகிகள் மத்தியில் இருந்து வந்தது. இப்படியான நிலையில் பாமக தலைமை நிர்வாக குழுவில் அன்புமணியை அதிரடியாக நீக்கிவிட்டு புதிய நிர்வாக குழுவை அமைத்து ராமதாசு உத்தரவிட்டுள்ளார். புதிய நிர்வாக குழுவில் ஜி கே மணி சிவபிரகாசம், அருள்மொழி, அருள், கவிஞர் ஜெயபாஸ்கரன், பேராசிரியர் தீரன், ஏகே மூர்த்தி உள்ளிட்ட 21 பேர் இடம் பெற்றுள்ளனர். குறிப்பாக அன்புமணியால் நீக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள் இந்த குழுவில் இடம் பிடித்துள்ளனர். இதனால் புதிய பரபரப்பு கிளம்பியுள்ளது.
