தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளதால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தேர்தல் பிரச்சாரம் என தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே பாமகவில் அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கூட்டணி குறித்து அறிவிப்பும் இதுவரை வெளியாகாமல் உள்ளது. இப்படியான நிலையில் சமீபத்தில் ராமதாசுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரை நேரில் சென்று அன்புமணி சந்தித்திருந்தார்.
அதேசமயம் ஸ்டாலின் மற்றும் இபிஎஸ் என அரசியல் தலைவர்கள் பலரும் அவரை நேரில் சென்று சந்தித்தே நலம் விசாரித்தனர். இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸுக்கு ஏதாவது நடந்தால் சும்மா விட போவதில்லை என அன்புமணி காட்டமாக தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று நடந்த கூட்டத்தில் பேசிய அன்புமணி, டாக்டர் ராமதாஸ் என்ன எக்ஸிபிஷனா?, ஐயாவுக்கு ஏதாவது நடந்தால் சும்மா விடமாட்டேன், ராமதாசை வைத்துக் கொண்டு நாடகமாடி கொண்டிருக்கின்றனர். அனைவருக்கும் போன் செய்து வரவழைத்து பார்க்க வைக்கின்றனர் என்று அன்புமணி தெரிவித்துள்ளார். அவருடைய இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு கிளப்பியுள்ளது.
