பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகனும், கட்சியின் தலைவருமான அன்புமணிக்கு இடையே பனிப்போர் நீடித்து வருகிறது. இந்தசூழலில் தான் கடந்த ஆகஸ்ட் மாதம் 19ம் தேதியன்று தைலாபுரம் தோட்டத்தில் அக்கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு கூடியது. அதில், அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகளை முன்வைத்து, ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் விளக்கமளிக்க நோட்டீஸ் அனுப்பியிருந்தது. ஆனால் விளக்கமளிக்கவில்லை. இதனைத்தொடர்ந்து மீண்டும் பாமக ஒழுங்கு நடவடிக்கை குழுவின் குற்றச்சாட்டுகளுக்கு அன்புமணி விளக்கமளிக்க, ராமதாஸ் கெடு விதித்திருந்தார்.
ராமதாஸ் விதித்த கெடு நேற்றோடு நிறைவடைந்தது. ஏற்கனவே விதிக்கப்பட்ட கெடுவில் அன்புமணி அதற்கு விளக்கமளிக்கவில்லை. தற்போது, மீண்டும் கெடு விதித்தும் அதை அன்புமணி கண்டுகொள்ளாமல் இருக்கிறார். அன்புமணி மீது சுமத்தப்பட்ட 16 குற்றச்சாட்டுகளுக்கும் இரண்டு முறை அவகாசம் அளித்து பதிலளிக்காததால், அவை உண்மையானதே, சரியானதே என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதனால் அவரை அக்கட்சியின் பாமக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளார். மேலும் விரும்பினால் தனிக்கட்சியை தொடங்கு என்று அன்புமணியிடம் 3 முறை கூறினேன். இப்போதும் அன்புமணி புதிதாக கட்சியை தொடங்கிக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.
டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…
2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…
திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…