ஷாக்… 100 கோடி லஞ்சம் கொடுத்த பள்ளிகளை ஏன் விசாரிக்கல?… ஊழல் வழக்கில் பாய்ந்த அன்பில் மகேஷின் அதிரடி கேள்வி… இணையத்தில் பெரும் வைரல்…!!

By Swetha on கார்த்திகை 5, 2026

Spread the love

தனியார் பள்ளிகளுக்கு 20 ஆண்டு கால நிரந்தர அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கூறி ரூ.400 கோடி முறைகேடு செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை, 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதன்படி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் அவரை விசாரணைக்கு உட்படுத்திய நிலையில், நேற்று மாலை நீதிபதி சத்தியமூர்த்தி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். போலீஸார் தம்மைத் துன்புறுத்தவில்லை என்றும், உணவு மற்றும் மருத்துவ வசதிகள் முறையாக வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்ததை அடுத்து, அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து அன்பில் மகேஷின் ஜாமீன் மனு மீது நடைபெற்ற விசாரணையின் போது, அவர் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வலுவான வாதங்களை முன்வைத்தார். அரசாணையில் கூடுதல் அரசுச் செயலாளர்தான் கையெழுத்திட்டார் என்றும், 20 ஆண்டுகளுக்கான அங்கீகாரம் என்பது பல துறை அதிகாரிகளைக் கடந்து கூட்டாக எடுக்கப்பட்ட முடிவு என்றும் சுட்டிக்காட்டினார். மேலும், அரசகுமார் என்பவர் அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் தர வேண்டும் என்று பொய் கூறி ரூ.100 கோடி லஞ்சம் வசூலித்ததற்கு அன்பில் மகேஷ் எவ்வாறு பொறுப்பாக முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்.

   

அரசகுமார் மற்றும் புகார்தாரர் இளங்கோவனிடமே பள்ளி நிர்வாகங்கள் பணம் கொடுத்துள்ளதாகத் தெரிவித்த வழக்கறிஞர், அரசகுமாருக்கு லஞ்சம் கொடுத்ததாகக் கூறிய தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் காவல் துறை ஏன் விசாரணை நடத்தவில்லை என்று வினவினார். சட்டப்படி லஞ்சம் கொடுத்தவர்களுக்குக் காவல் துறை பாதுகாப்பு வழங்க முடியாது என்றும் அன்பில் மகேஷ் தரப்பில் வாதிடப்பட்டது. அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், இந்த வழக்கின் தீர்ப்பை வரும் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.