ரூ.100 கோடியா இல்லை ரூ.400 கோடியா?…. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வழக்கில் வெடிக்கும் அடுத்தடுத்த திடுக்கிடும் உண்மைகள்….!

Spread the love

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில் ரூ.400 கோடி வரை முறைகேடு நடைபெற்றதாகக் கூறப்படும் புகாரில், திமுக முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கடந்த அக்டோபர் 26-ஆம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய நபராகக் கருதப்படும் முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமார் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ள நிலையில், அவரிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய தி.மு.க. பிரமுகர் அரசகுமார் ஏற்கனவே ஜாமீனில் வெளியே வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற அன்பில் மகேஷின் ஜாமீன் மனு மீதான விசாரணையின் போது இரு தரப்பினருக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. அன்பில் மகேஷ் தரப்பில், அரசாணையில் கூடுதல் செயலாளர்தான் கையெழுத்திட்டுள்ளாரென்றும், அரசகுமார் செய்த தவறுக்கு அமைச்சர் பொறுப்பாக முடியாது என்றும் வாதிடப்பட்டது. மாறாக, அரசு தரப்பில் புதிய ஆதாரங்கள் சிக்கியுள்ளதாகவும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள கார் டிரைவர் சரவணனை கைது செய்து விசாரிக்க வேண்டியுள்ளதாலும் ஜாமீன் வழங்கக் கூடாது என வலுவாக வாதிடப்பட்டது.

விசாரணையின் போது, தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் வசூலிக்கப்பட்ட பணம் அன்பில் மகேஷின் வீட்டில் ஒப்படைக்கப்பட்டதாகக் கூறப்படும் வீடியோ ஆதாரம் முக்கிய விவாதப் பொருளாக மாறியது. அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள முத்துக்குமாரின் உறவினரும், கார் டிரைவருமான சரவணனை போலீசார் தற்போது தீவிரமாக தேடி வருகின்றனர். சரவணன் சிக்கினால் மட்டுமே இந்த ஊழல் வழக்கில் உண்மையான திருப்பமும், மேலும் பல மறைக்கப்பட்ட உண்மைகளும் வெளிவரும் என்று புலனாய்வுத்துறை கருதுகிறது.

பரபரப்பான இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு வரும் 10-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. முன்னாள் அமைச்சரின் ஜாமீன் மனு மீது நீதிமன்றம் வழங்கவுள்ள இந்த தீர்ப்பு தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, தலைமறைவாக உள்ள கார் டிரைவர் சரவணன் கைது செய்யப்படுவதும், முத்துக்குமாரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கப்படுவதும் இந்த வழக்கின் அடுத்த கட்ட திசையை நிர்ணயிப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கும்.

Nanthini

Recent Posts

“லாரியை ஏற்றிக் கொன்றுவிடுவேன்”….. திமுக முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் மீது ரூ.3.35 கோடி மோசடி மற்றும் கொலை மிரட்டல் புகார்…. திமுகவுக்கு அடுத்த ஷாக்…!

சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், முன்னாள் திமுக அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் மீது சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் அருண்ராஜ்…

15 seconds ago

“வெள்ளைத்தாளில் கையெழுத்து.. ஆட்டம் காட்டும் எதிர்க்கட்சிகளுக்கு CM விஜய் வைத்த செக்”…. தவெக MLA-க்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு….!

தமிழக அரசியலில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தகவல்களின்படி, தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் விஜய் கடும் எச்சரிக்கை…

3 minutes ago

ஐயோ வலிக்கிது… என்னை விட்ருங்க ப்ளீஸ்… கதறிய மனைவியின் கழுத்தை முறுக்கி… தரையில் தலையை மோதி கொன்ற கொடூரக் கணவன்… தெலுங்கானாவை உலுக்கிய பகீர் சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத் தலைமையகத்தில் உள்ள காவலர் குடியிருப்பில், 43 வயதான மகபூப் பீ என்ற பெண் ஊர்க்காவல்…

13 minutes ago

ஐயோ… ரீல்ஸ் மோகத்தால் நேர்ந்த விபரீதம்… கையில் பட்டாசை வெடிக்க வைத்த இளைஞருக்கு… 5.5 மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சை… பதறவைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!!

சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வீடியோக்களைப் பதிவிடுவதற்காக இளைஞர்கள் எந்த எல்லைக்கும் செல்லத் துணிகிறார்கள். சிலர் உயரமான இடங்களில் ஏறி ஆபத்தான…

28 minutes ago