கைதான தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் அரசகுமாரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ரூ.200 கோடிக்கும் அதிகமாக நிதிப் பரிவர்த்தனை நடந்துள்ளதாகத் தனியார் இதழ் ஒன்றில் வெளியான செய்தி தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில் சட்டரீதியான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி, வழக்கை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லத் தமிழக வெற்றிக் கழக அரசு திட்டமிட்டு வருவதாகவும், விசாரணையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு கைது நடவடிக்கைகள் வரை பாய வாய்ப்புள்ளதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
