அடச்சீ… குடிக்கப் பணம் தராத தாய்… அடித்துக் கொன்ற கொடூர மகன்… நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…!!

By Swetha on ஆவணி 2, 2026

Spread the love

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள கீழ்பாதிரி கிராமத்தைச் சேர்ந்தவர் மங்கலட்சுமி (78 வயது). இவர் மாணிக்கம் என்பவரின் மனைவி ஆவார். இவருடைய மகன் ஏழுமலை கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். ஏழுமலைக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த 27-ஆம் தேதி ஏழுமலை தனது தாய் மங்கலட்சுமியிடம் வந்து மது அருந்துவதற்காகப் பணம் கேட்டுள்ளார். அதற்கு மங்கலட்சுமி பணம் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஏழுமலை, தாயிடம் தகராறில் ஈடுபட்டு அவரைப் பலமாகத் தாக்கியுள்ளார்.

   

அத்துடன் நிற்காமல், வயதான தாய் என்றும் பாராமல் மங்கலட்சுமியின் காதில் அணிந்திருந்த தங்கக் கம்மலையும் வலுக்கட்டாயமாகப் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.