“ரூ.10,000 கோடி கொடுத்தாலும்” அதை மட்டும் செய்ய மாட்டேன்னு சொன்னார் ஸ்டாலின்… ஆனால் இன்றோ… தவெகவின் இரட்டை வேடத்தைக் கிழித்தெறிந்த அன்பில் மகேஷ்..!!

By Soundarya on ஆனி 27, 2026

Spread the love

தேசியக் கல்விக் கொள்கையை (NEP) தமிழக அரசு ஏற்காது என்று கூறிவிட்டு, தற்போது APAAR (One Nation One Student ID) அடையாள அட்டை திட்டம் மூலம் தமிழக மாணவர்களின் கல்வி சார்ந்த விவரங்களை ஒன்றிய அரசிடம் ஒப்படைக்கத் துடிப்பதாக தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை மற்றும் செயல்பாடுகள் மீது முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தவெகவின் இத்தகைய முரண்பாடான அரசியல் நகர்வுகளைச் சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளார்.

மேலும் தனது பதிவில், “ஒன்றிய அரசு 10,000 கோடி ரூபாய் நிதி கொடுத்தாலும் கூட, தமிழ்நாட்டின் கல்வி உரிமைகளை விட்டுக்கொடுக்காமல் தேசியக் கல்விக் கொள்கையை (NEP-2020) ஒருபோதும் ஏற்க மாட்டோம் என்று திட்டவட்டமாகக் கூறி மறுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் நெஞ்சுரமும், கொள்கை உறுதியும் தவெகவிற்கு வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மாணவர்களின் நலனிலும், மாநிலத்தின் கல்வி உரிமையிலும் திமுக அரசு காட்டும் சமரசமற்ற போக்கைத் தவெக பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.