சென்னையை சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வீட்டிலிருந்து நிலையில் அவருடைய செல்போனில் இருந்த ஆன்லைன் செயலின் மூலமாக கன்னியாகுமரியை சேர்ந்த லிவின் ராஜ்(25) என்ற இளைஞரோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கமானது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. அதனால் இருவரும் அடிக்கடி வீடியோ காலில் பேசி வந்துள்ளார்கள். அப்படி பேசும்போது பெண்ணின் ஆபாச படங்களை லிபின் ராஜ் தன்னுடைய செல்போனில் பதிவு செய்து வைத்துள்ளார். பின்பு அக்டோபர் 14ஆம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள லாட்ஜிற்கு வரவேண்டும் என்றும் இல்லையென்றால் ஆபாச புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு விடுவேன் என்றும் அந்த பெண்ணை மிரட்டி இருக்கிறார்.
இதற்கு பயந்த அந்தப் பெண் லாட்ஜுக்கு வந்துள்ளார். அங்கு அப்பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்துள்ளார் லிபின்ராஜ். மேலும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பும் அந்த பெண்ணை மீண்டும் லாட்ஜிற்கு வரச் செய்துள்ளார். அப்போது தன்னுடைய பாட்டி இறந்து விட்டதாகவும் வர முடியாது என்றும் அந்த இளம்பெண் கூறியதால் ஆத்திரமடைந்த லிபின் ராஜ் ஆபாச புகைப்படங்களை அந்த பெண்ணின் தாயாருக்கு அனுப்பி வைத்துள்ளார் .இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு லிபின்ராஜை கைது செய்துள்ளார்கள்.
