தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையில், அரசுப் பள்ளிகளுக்கு மூன்று முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. முதலில், 01.12.2025 நிலவரப்படி காலியாக உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் குறித்த விவரங்கள் அனைத்தையும் உடனடியாகச் சேகரிக்குமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இரண்டாவதாக, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் குறித்து ஒரு முக்கிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டச் செயலியில், நகர்ப்புறப் பகுதிகளில் 60% மாணவர்கள் மட்டுமே உணவு உட்கொண்டதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. செயலியில் உள்ளீடு செய்யப்படும் எண்ணிக்கையின் அடிப்படையிலேயே நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்பதால், பள்ளியில் உணவு உட்கொள்ளும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையைச் சரியாகப் பதிவு செய்யுமாறு பள்ளிப் பொறுப்பாளர்களுக்கு உரிய பயிற்சி வழங்கி, உடனடி நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மூன்றாவதாக, தெருநாய்கள் அச்சுறுத்தல் தொடர்பாகப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் நாய் தடுப்பூசி குறித்து அறிவுறுத்துதல், பள்ளி வளாகத்தில் விழிப்புணர்வு பதாகைகள் ஒட்டுதல், காலை வணக்கக் கூட்டத்தில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், தெருநாய்கள் வளாகத்திற்குள் நுழையாமல் இருக்க நோடல் அதிகாரி ஒருவரை நியமித்தல், தெருநாய்களுடன் விளையாடுவதைத் தவிர்க்க மாணவர்களுக்கு அறிவுரை வழங்குதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…