திருநெல்வேலி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் கீழ் உள்ள குழந்தை உதவி மையத்தில், தேர்வு இல்லாமல் ஒப்பந்த அடிப்படையில் வேலைவாய்ப்பிற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் 3 மேற்பார்வையாளர் மற்றும் 3 வழக்குப்பணியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
மேற்பார்வையாளர் பதவிக்குச் சமூகப்பணி, கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் அல்லது சமூக அறிவியல் ஆகியவற்றில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இவர்களுக்கு மாதச் சம்பளமாக ரூ.21,000 வழங்கப்படும்.
வழக்குப்பணியாளர் பதவிக்கு 12ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் சிறந்த தகவல் தொடர்புத் திறன் தேவை. இவர்களுக்கு மாதச் சம்பளமாக ரூ.18,000 வழங்கப்படும். இரண்டு பதவிகளுக்கும் 01.12.2025 நிலவரப்படி, 42 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அவசர உதவி சேவையில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
இந்த நியமனம் முற்றிலும் தற்காலிகமானது (ஓராண்டு ஒப்பந்தம்) மற்றும் தொகுப்பூதிய அடிப்படையில் மட்டுமே இருக்கும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள், விண்ணப்பப் படிவத்தை https://tirunelveli.nic.in என்ற முகவரியில் பதிவிறக்கம் செய்து, டிசம்பர் 23, 2025 அன்றுக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். குறித்த தேதிக்குப்பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்தில் (6E-2131), விமானம் ஓடுதளத்தில் நகர்ந்து கொண்டிருந்தபோது ஒரு பயணியின் கைப்பையில்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சென்னை கொளத்தூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்கும்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியை…
பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி திரையுலகினரிடையே பெரும்…
தவெக தலைவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகக் கருதப்படும் ரதன் பண்டிட், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி அரசியல்…
தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத மாபெரும் மாற்றமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108…