வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. ஆளுங்கட்சியான திமுக அதன் கூட்டணி கட்சிகளுடன் வலுவாக உள்ளது. ஆனால் எதிர்க்கட்சியான அதிமுக, தற்போது வரை பாஜகவுடன் மட்டும் கூட்டணியை உறுதி செய்துள்ளது. தேர்தலை மனதில் கொண்டு, ஒருங்கிணைந்த அதிமுகவை உருவாக்க வேண்டும் என்று பாஜக தலைமை திட்டமிட்டுள்ளது.
இதற்காக, பாஜக மத்திய தலைமை பிரிந்து சென்ற தலைவர்களான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை மீண்டும் அதிமுகவில் இணைக்க முயற்சித்தது. இருப்பினும், அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி , அவர்கள் இருவரையும் கட்சியில் இணைக்க வாய்ப்பே இல்லை என்று உறுதியாகத் தெரிவித்துவிட்டார்.
இந்தச் சூழலில், தமிழகத்தில் வலுவான கூட்டணியை அமைக்கும் நோக்கில், பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான அமித் ஷா, இபிஎஸ்ஸுடன் பேசுவதற்காக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை அனுப்பி வைத்தார். அப்போது, இபிஎஸ்ஸும் நயினார் நாகேந்திரனும் அதிமுக-பாஜக கூட்டணியில் புதிய கட்சிகளைச் சேர்ப்பது மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனையின்போது, ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனை குறைந்தபட்சம் கூட்டணியிலாவது இணைத்துக் கொள்ளலாமே என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார். அதற்கும் இபிஎஸ் உறுதியாக மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஓபிஎஸ், டிடிவி ஆகியோரை கூட்டணியில் சேர்க்க பாஜக போட்ட திட்டம் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இதனால் கூட்டணி குறித்து பாஜகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்திற்குட்பட்ட ஜகத்பூர் பகுதியைச் சேர்ந்த சுக்பீர் சிங் என்பவர் அரியானாவில் பணியாற்றி வந்தார். 11 ஆண்டுகளுக்கு…
தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த், பெங்களூரு எலகங்கா பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்துக்கொண்டு மக்காச்சோள இயந்திரங்கள் தயாரிக்கும் தொழில் செய்து…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பணி நிமித்தமாகக் காவலாளி ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அதிவேகமாக வந்த லாரி மோதிப் பரிதாபமாக…
சென்னை நீலாங்கரை, கபாலீஸ்வரர் நகர் தெற்கு 4-வது மெயின் ரோடு பகுதியில், பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம்…
வடகொரியா தனது வான் எல்லை பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில், மனித உதவியின்றி இலக்குகளைத் தானாகவே துல்லியமாகக் கண்டறிந்து தாக்கும்…
அமெரிக்காவில் கால்பந்து போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற ராணுவ வான்வழி சாகசத்தின் போது ஹெலிகாப்டர் மிக அருகில் பட்டாசுகள் வெடித்துச் சிதறிய…