ஷூட்டிங் ஸ்பாட்டில் Packup-னு சொன்ன கமல் பட நடிகை.. கடுப்பான தல அஜித்.. நடிகையை ஓடவிட்ட தரமான சம்பவம்..

By admin on கார்த்திகை 25, 2023

Spread the love

சிரிச்சு சிரிச்சு வந்தா சீனாதானா டோய், இந்த ஐட்டம் பாடல், கமல்ஹாசன் நடித்த வசூல் ராஜா எம்பிபிஸ் படத்தில் இடம்பெற்று, அப்போது செம டிரண்டிங் ஆனது. இந்த பாடல் காட்சியில் நடித்தவர் மும்பையை சேர்ந்த நடிகை ரஸிகா. இதே காலகட்டத்தில், சென்னை பச்சையப்பா கல்லூரி அருகே இருந்த குஷால்தாஸ் கார்டனில், அஜீத்குமார் நடிப்பில் அட்டகாசம் படப்பிடிப்பு நடந்தது. இதில் தீபாவளி தல தீபாவளி என்ற பாடல் எடுக்கப்பட்டது. இதில் நடிகை ரஸிகா, அஜீத்குமாருடன் சேர்ந்து ஆடினார்.

Ajith Kumar

   

இரண்டு சரணம், ஒரு பல்லவி முடிந்த நிலையில், அஜீத் அமர்ந்திருக்க சிறிது அருகில் ரஸிகாவும் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தார். இதைப் பார்த்த சிலர் பதறிப்போய் ரஸிகாவிடம் சொல்லப் போக, அஜீத்குமார் கண் அசைவால், விடுங்க, பரவாயில்லை என தடுத்து விட்டார். மும்பை போன்ற இடங்களில் கால்மேல் கால் போட்டு அமர்வது சாதாரண விஷயம்தான். இங்குதான் அது அவமரியாதையாக பார்க்கப்படுகிறது, என்ற கோணத்தில் தடுத்து விட்டார்.

   

Ajith Kumar

 

அடுத்து ஒரு சரணம் நடனக்காட்சி எடுத்த நிலையில், மீண்டும் அமர்ந்த ரஸிகா, என்ன பேக்கப் பண்ணிடலாமா, என அங்கிருந்தவர்களிடம் கேட்டிருக்கிறார். இதைக் கேட்டவுடன் சுர்ர் என கோபம் தலைக்கேறிய நிலையில், பயங்கர டென்சன் ஆனார் அஜீத்குமார். என் படத்துக்கு பேக்கப் சொல்ல இவங்க யாரு என கோபப்பட்ட அஜீத், படத்தின் டைரக்டர் சரணை அழைத்து இந்த பொண்ணு இங்க இருக்க கூடாது, உடனடியாக அனுப்புங்க என்று சொல்லிவிட்டு கேரவனுக்குள் சென்று அமர்ந்துவிட்டார். பேக்கப் சொல்லும் உரிமை, முடிவு இயக்குநரின் முடிவு. பேக்கப் சொல்லும் உரிமை அந்த படத்தில் நடிக்கும் ஹீரோவுக்ேக கிடையாது என்ற நிலையில், ரஸிகாவின் இந்த செயல் அஜீத்குமாரை கோபப்படுத்தி இருக்கிறது.