“18 ஆண்டு கால பந்தம்.. பாறாங்கல்லால் முடிந்த கதை!”.. கள்ளக்காதலுக்காகக் கணவரைப் புதைத்த கொடூர மனைவி… ஆந்திராவில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!!!

By Muthu Mani on பங்குனி 28, 2026

Spread the love

ஆந்திர மாநிலம் அனந்தபுரத்தைச் சேர்ந்த ஹனுமந்த ராயுடு மற்றும் சுகன்யா தம்பதிக்குத் திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகின்றன. அம்ருதா என்ற மகளும், சந்தீப் என்ற மகனும் உள்ள இந்த குடும்பம், கடந்த 15 ஆண்டுகளாக கல்யாணதுர்கம் பகுதியில் உள்ள பழைய குளம் அருகே தங்கி ஆடுகளை மேய்த்து வந்துள்ளனர். இந்நிலையில், சுகன்யாவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த கணவர் ஹனுமந்த ராயுடு, மூன்று மாதங்களுக்கு முன்பு அந்தத் தொடர்பைக் கைவிடுமாறு எச்சரித்துள்ளார். இதனால் தம்பதிக்கு இடையே அடிக்கடி கடுமையான தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

தொடர் வாக்குவாதத்தால் ஆத்திரமடைந்த சுகன்யா, தனது கணவரைப் பாறாங்கல்லால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்தார். பின்னர் யாருக்கும் தெரியாமல் உடலை வீட்டின் பின்புறத்திலேயே புதைத்து மறைத்துள்ளார். பள்ளி முடிந்து வந்த மகள் அம்ருதா இதைக் கண்டுபிடித்தபோது, யாரிடமாவது சொன்னால் உன்னையும் கொன்றுவிடுவேன் எனச் சுகன்யா மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன சிறுமி நீண்ட நாட்களாக இந்த ரகசியத்தை மௌனமாகவே வைத்திருந்துள்ளார்.

   

நேற்று தாய்க்கும் மகளுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டபோது, சுகன்யா தனது மகளையும் கொலை செய்ய முயற்சித்துள்ளார். அதிலிருந்து நூலிழையில் தப்பிய அம்ருதா, தனது தந்தையின் சொந்த ஊரான ஹமினிரெட்டிபள்ளிக்கு ஓடிச் சென்று உறவினர்களிடம் நடந்த உண்மைகளைக் கூறியுள்ளார். இதற்கிடையில், சுகன்யா கல்யாணதுர்கம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். போலீஸார் வழக்குப்பதிவு செய்து, புதைக்கப்பட்ட உடலைத் தோண்டி எடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.