காலையிலேயே ஷாக்..! நாடு முழுவதும் பால் விலை உயர்வு.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்..!!

By Soundarya on வைகாசி 14, 2026

Spread the love

குஜராத் கூட்டுறவு பால் விற்பனை இணையமான அமுல் (Amul), நாடு முழுவதும் தனது பால் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தியுள்ளது. தீவன விலை உயர்வு மற்றும் எரிபொருள் கட்டண உயர்வு காரணமாக, பால் உற்பத்தி மற்றும் அதைச் செயலாக்குவதற்கான ஒட்டுமொத்த செலவும் கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த கூடுதல் உற்பத்திச் செலவை ஈடுகட்டும் நோக்கிலேயே இந்த விலை உயர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமுல் நிறுவனம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது .

இந்த புதிய விலை உயர்வு இன்று முதல் உடனடியாக நாடு தழுவிய அளவில் அமலுக்கு வந்துள்ளது . இருப்பினும், தற்போதைய பொதுவான உணவுப் பொருட்களின் பணவீக்க விகிதத்தோடு ஒப்பிடும்போது, தங்களது இந்த பால் விலை உயர்வு மிகவும் குறைவானதுதான் என்றும் அமுல் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அமுல் நிறுவனத்தின் இந்த திடீர் அறிவிப்பு, அத்தியாவசியப் பொருளான பாலைத் தினமும் வாங்கும் நடுத்தரக் குடும்பங்களின் மாதாந்திர பட்ஜெட்டில் கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது.