அடுத்த ஷாக்..! TVK விற்கு ஆதரவு கொடுக்கிறேன்… அன்று நடந்த சம்பவம் இதனால் தான்… அமமுக MLA காமராஜ் அதிரடி..!!

By Swetha on வைகாசி 12, 2026

Spread the love

தமிழக வெற்றிக் கழக அரசுக்குத் தனது ஆதரவைத் தெரிவிப்பதாக அமமுக சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் சட்டப்பேரவையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இளைஞர்கள் அதிகளவில் இடம்பெற்றுள்ள இந்த அரசு முழுமையாக ஐந்து ஆண்டு காலம் நீடிக்க வேண்டும் என்று அவர் தனது விருப்பத்தைத் தெரிவித்தார். முதலமைச்சர் விஜய் ஒரு சிறந்த இளைஞராக இருப்பதால், அவர் நிச்சயம் மக்களுக்குச் சிறந்த ஆட்சியைத் தருவார் என்று நம்புவதாகவும் அவர் பாராட்டிப் பேசினார்.

மேலும், கடந்த காலக் கசப்பான சம்பவங்களுக்கு அன்றைய அரசியல் சூழலே காரணம் என்று குறிப்பிட்ட அவர், பழைய கையெழுத்திட்ட விவகாரத்தை மறைமுகமாகச் சுட்டிக்காட்டினார். புதிய அரசியல் மாற்றத்தை வரவேற்கும் விதமாகவும், தமிழகத்தின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டும் அமமுக இந்த ஆதரவு முடிவை எடுத்துள்ளதாககூறியுள்ளார் ,. இது சட்டமன்ற வட்டாரத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.