அய்யோ , என்ன விட்டுருங்க… காரில் மாணவனை கதற கதற தாக்கிய சக மாணவர்கள்… காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தும் வீடியோ….!

By Nanthini on புரட்டாதி 6, 2025

Spread the love

இந்தியாவில் லக்னோவில் உள்ள அமிதி பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஒரு மாணவரை அவருடைய சக மாணவி ஒருவர் சில மாணவர்களுடன் சேர்ந்து தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோவில் ஷிகார் என்ற மாணவர் நன்றிக்கு கார் ஒன்றின் பின் இருக்கையில் அமர்ந்து கொண்டிருக்கிறார். முன் இருக்கையில் அமர்ந்து கொண்டிருக்கும் மாணவி ஒருவர் எழுந்து நின்று அவரை சரமாரியாக கன்னத்தில் அறைந்து தாக்குகிறார். தனக்கு அடி விழுவதை தடுக்க வாலிபர் முயலும் நிலையில் கையை கீழே போடு என்று சொல்லி சொல்லி அந்த பெண் அடிக்கின்றார். அவரைத் தொடர்ந்து குறிக்கிடும் மற்றொரு மாணவரும் அந்த வாலிபரை தாக்குகின்றார்.

அதுமட்டுமல்லாமல் மோசமான வார்த்தைகளால் அவருடைய பெற்றோர் மற்றும் குடும்பத்தினரை திட்டியுள்ளனர். இந்த தாக்குதல் சுமார் 45 நிமிடங்களுக்கு மேல் நீடித்துள்ளது. தற்போது அவர்கள் அறைந்ததில் மாணவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் ஊன்றுகோல் உதவியுடன் நடமாடுவதாகவும் மாணவனின் தந்தை தெரிவித்துள்ளார். இந்த வீடியோ வெளியானதை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவத்தில் ஈடுபட்ட ஐந்து பேரை கைது செய்துள்ளனர். இந்த வீடியோ தற்போது வெளியாகி பலருடைய கண்டனங்களையும் பெற்று வருகிறது.