“யாரும் தப்பிக்க முடியாது”…. தோல்விக்கு பின் அமித்ஷாவின் முதல் தமிழக பயணம்…. அதிரடி ஆக்ஷனில் இறங்கும் டெல்லி மேலிடம்….!

By Nanthini on ஆவணி 6, 2026

Spread the love

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகஸ்ட் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் புதுச்சேரி மற்றும் தமிழகத்திற்கு இரண்டு நாள் அரசு மற்றும் ஆன்மீகப் பயணம் மேற்கொள்கிறார். ஆகஸ்ட் 8-ஆம் தேதி மாலை புதுச்சேரி வந்தடையும் அவர், இரவு அங்கேயே தங்கி நிர்வாகம் தொடர்பான பல்வேறு விவகாரங்களை ஆய்வு செய்கிறார். அவரது வருகையை ஒட்டி புதுச்சேரி மற்றும் தமிழக எல்லைப் பகுதிகளில் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தப் பயணத்தின் முக்கிய நிகழ்வாக, ஆகஸ்ட் 9-ஆம் தேதி காலை புதுச்சேரி கோரிமேடு காவல் மைதானத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்கிறார். அங்கு புதுச்சேரி காவல்துறைக்கு வழங்கப்பட்டுள்ள நாட்டின் மிக உயரிய மற்றும் மதிப்புமிக்க ‘ஜனாதிபதியின் வண்ண விருதை’ அவர் முறைப்படி வழங்கி கௌரவிக்க உள்ளார்.

   

புதுச்சேரி நிகழ்வுகளை நிறைவு செய்த பிறகு, ஆகஸ்ட் 9 பிற்பகலில் அமித் ஷா திருவண்ணாமலைக்குச் செல்கிறார். அங்குள்ள உலகப் புகழ்பெற்ற பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி ஆசிரமத்தில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் பங்கேற்று தரிசனம் செய்கிறார். மேலும் அண்ணாமலையார் திருக்கோயிலிலும் அவர் சுவாமி தரிசனம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

   

சமீபத்தில் முடிந்த 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாஜக எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியாமல் சரிவைச் சந்தித்த நிலையில், அமித் ஷா தமிழகம் வருவது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெறுகிறது. டெல்லியில் ஏற்கனவே கட்சித் தலைவர்களுடன் முதற்கட்ட ஆலோசனை நடத்தியுள்ள அவர், இந்தப் பயணத்தின் போது தமிழக பாஜக மூத்த தலைவர்களை நேரில் சந்தித்து, தேர்தலுக்குப் பிந்தைய சூழல் மற்றும் கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்தும் முக்கிய ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.