ச்ச… காலை 9 முதல் மாலை 5 வரை மட்டுமே…நோ ஓவர் டைம்… அமெரிக்க ஆபீஸ் கலாச்சாரத்தை… அம்பலப்படுத்திய இந்திய பெண்… இணையத்தில் வீடியோ வைரல்…!

By Swetha on புரட்டாதி 19, 2026

Spread the love

அமெரிக்காவில் வசிக்கும் நிர்மலா என்ற இந்தியப் பெண், அந்நாட்டின் ‘9 to 5’ பணி கலாச்சாரம் குறித்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் பணிநேரம் முடிவடைந்த பிறகும் ஊழியர்கள் மேலதிக நேரம் வேலை செய்ய எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில், அமெரிக்காவில் பணிநேரம் மற்றும் தனிப்பட்ட நேரத்திற்கான எல்லைகள் மிகவும் தெளிவாக மதிக்கப்படுவதாக அவர் ஒப்பிட்டுக் கூறியுள்ளார்.

அமெரிக்க நிறுவனங்களில் மாலை 5 மணிக்கு பணிநேரம் முடிகிறது என்றால், அதற்கு சரியாக 10 நிமிடங்களுக்கு முன்பே ஊழியர்கள் தங்கள் பணிகளை முடித்து பொருட்களையெல்லாம் பேக் செய்யத் தொடங்கிவிடுகிறார்கள் என்று நிர்மலா குறிப்பிட்டுள்ளார். மாலை 5 மணி ஆனவுடன் ஒருவர் கூட ஒரு வினாடி கூட கூடுதல் நேரம் வேலை செய்யாமல் உடனடியாக அலுவலகத்தை விட்டுப் புறப்பட்டு வீட்டிற்குச் சென்றுவிடுகிறார்கள் என்பதை அவர் வியப்புடன் பகிர்ந்துள்ளார்.

   

பணியாளர்களின் சொந்த நேரத்திற்கு அமெரிக்காவில் வழங்கப்படும் இந்த முக்கியத்துவமும், பணிநேரத்திற்கு அளிக்கப்படும் மரியாதையும் தனக்கு மிகவும் பிடித்துள்ளதாக அவர் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த சமூக வலைத்தளப் பயனர்கள் பலரும், “வேலைக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இடையிலான சரியான சமநிலை இதுதான்” என்றும், “பணி முடிந்ததும் சொந்த வாழ்க்கை தொடங்க வேண்டும்” என்றும் கருத்து தெரிவித்து ஆதரவு அளித்து வருகின்றனர்.