அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பொம்மை தயாரிப்பு நிறுவனமான Zuru, ‘My Mini Baby Mom and Baby Surprise’ என்ற பெயரில் புதிய பொம்மை ஒன்றைச் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பொம்மையின் வயிற்றுப் பகுதி பெரிதாக வடிவமைக்கப்பட்டு, கர்ப்பிணிப் பெண் போன்று தோற்றமளிக்கிறது.
சமீபத்தில் ‘Xoxo Toyz’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த பொம்மையை ‘அன்பாக்சிங்’ செய்யும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலானது. அந்த வீடியோவில், பொம்மையின் வயிற்றுப் பகுதியைத் திறந்து, உள்ளே இருக்கும் அம்னியோடிக் பைக்குள் இருக்கும் சிறிய குழந்தையை வெளியே எடுத்து பிரசவம் பார்ப்பது போல் காட்டியுள்ளனர். பின்னர் அந்த வயிற்றுப் பகுதியை மீண்டும் இயல்பு நிலைக்கு மூடிவிடலாம்.
https://www.instagram.com/reel/Dc88omEu6TG/?utm_source=ig_web_copy_link&stkn=NTc4MTIwNjQ2YQ==
இந்த வீடியோவைக் கண்ட சமூக வலைதளப் பயனர்கள் இருவேறு கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். பலர் “இது குழந்தைகளுக்கு ஏற்ற பொம்மையே அல்ல”, “குழந்தைகளின் மனநிலையைப் பாதிக்கும் விசித்திரமான விளையாட்டு” என அதிருப்தி தெரிவித்துள்ளனர். அதேவேளையில் சிலர் “இவ்வளவு எளிதாகப் பிரசவம் நடந்தால் நன்றாக இருக்குமே” என்றும் “நேரடியாக C-Section செய்கிறார்கள்” என்றும் நகைச்சுவையாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
