கலைக்கட்ட போகும் வீடு… புகைப்படத்தை வெளியிட்டு GOOD நியூஸ் சொன்ன ஆல்யா மானசா…

By indhuramesh on ஆனி 3, 2024

Spread the love

திரைப்படங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகளை காட்டிலும் சின்னத்திரையில் நடிப்பவர்கள் பிரபலம் ஆகி வருகிறார்கள். அப்படி சின்னத்திரை நடிகைகளில் பிரபலமானவர் ஆல்யா மானசா இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலை நடித்த பிறகு ரசிகர்களால் அதிகம் கவனிக்கப்பட்டார்.

அதன் பிறகு ராஜா ராணி பாகம் 2 இனியா உள்ளிட்ட சீரியல்களில் நடித்ததன் மூலம் இன்றளவும் ரசிகர்கள் விரும்பும் சின்னத்திரை நடிகையாக வலம் வருகிறார். இவர் ராஜா ராணி சீரியல் தன்னுடன் நடித்த சஞ்சீவ் கார்த்திகேயனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

   

ஆல்யா மானசா

   

நட்சத்திர தம்பதிகளான இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் இருக்கின்றனர். இந்நிலையில் ஆல்யா மானசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவின்படி இந்த தம்பதி புதிய வீட்டிற்கு குடிபோக இருப்பது உறுதியாகியுள்ளது.

 

விரைவில் தங்கள் புதிய வீட்டின் கிரகப்பிரவேசம் இருப்பதால் வீட்டை சுத்தப்படுத்தும் பணியில் இறங்கி இருப்பதாக குறிப்பிட்டு சிறிய அளவிலான துடப்பத்தை கையில் வைத்திருக்கும் மாதிரியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் நட்சத்திர தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.