வாய் பேச முடியாத ரசிகருக்கு ‘நான் ஈ’ பட வில்லன் செய்த மிகப்பெரிய உதவி.. வைரலாகும் வீடியோ..

By Mahalakshmi on ஜூன் 3, 2024

Spread the love

கன்னட சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகராக பலம் வரும் கிச்சா சுதீப், வாய் பேச முடியாத நபருக்கு உதவி செய்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. கன்னட படங்களில் பிரதானமாக நடித்து வரும் இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்திருக்கின்றார். இவரது உண்மையான பெயர் சுதீப் சஞ்சய்.

   

முதலில் ஹீரோவாக நடித்து வந்த இவருக்கு பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரமே கிடைத்தது. படங்களில் மட்டுமே நிஜ வாழ்க்கையில் மிகவும் நல்ல மனிதர் என புகழப்படக்கூடியவர். 2001 ஆம் ஆண்டு ஓம் பிரகாஷ் ராவ் இயக்கிய ஹீச்சா என்று திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அதன் பிறகு பல கன்னட படங்களில் நடித்த இவர் தமிழில் 2012 ஆம் ஆண்டு இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த நான் ஈ திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார்.

   

 

2015ல் பாகுபலி திரைப்படத்தில் நடித்திருப்பார். அதே ஆண்டு தளபதி விஜய் உடன் இணைந்து புலி என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார். பெரும்பாலும் கன்னட படங்களில் நடித்து வரும் இவர் தனது சமூக சேவை மூலமாக இந்தியா முழுவதும் பேமஸ் ஆகி வருகின்றார். நடிப்பது மட்டுமில்லாமல் பல பேருக்கு உதவி செய்து வரும் இவர் கிச்சா சுதீப் சேரிட்டபிள் என்ற தொண்டு நிறுவனம் ஒன்றை தொடங்கி அதில் குழந்தைகளுக்கான படிப்பு செலவு, கொரோனா காலகட்டத்தில் பல பேருக்கு உதவி என செய்து இருக்கின்றார்.

படிக்க முடியாத குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைப்பது, அவர்களுக்கு தேவையான சீருடை புத்தகம் வாங்கிக் கொடுப்பது என பல சமூக சேவைகளை செய்து வருகின்றார். அந்த வகையில் தற்போது அவரின் வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதாவது வாய் பேச முடியாத ஒரு ரசிகரை சந்தித்த கிச்சாசுதீப் அவருக்கு பண உதவி செய்திருக்கின்றார் மேலும் அவரது இல்லத்தில் அவரை அமர வைத்து உணவு கொடுத்திருக்கின்றார் இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது இதை பார்த்து ரசிகர்கள் பலரும் நீங்கள் படத்தில் மட்டும் தான் வில்லன் நிஜத்தில் ஹீரோ என்று கூறி வருகிறார்கள்