2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் களம், எதிர்பாராத கூட்டணி மாற்றங்களாலும் அதிருப்தி அலைகளாலும் பரபரப்பாகக் காட்சியளிக்கிறது. இந்தச் சூழலில், தற்போதைய முக்கிய விவாதப் புள்ளியாக மாறியிருக்கிறது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக). அக்கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ பனையூர் பாபு கட்சியின் தலைமை மீது அதிருப்தி தெரிவித்து அதிரடியாக விலகியிருக்கும் நிலையில், கட்சியின் முக்கிய முகமான ஆளூர் ஷாநவாஸைச் சுற்றியும் புதிய அரசியல் சர்ச்சைகள் மற்றும் வதந்திகள் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகின்றன.
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பே ஆளூர் ஷாநவாஸுக்கு போட்டியிட சீட் வழங்கப்படாதது விசிகவுக்குள் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது. கட்சியின் வளர்ச்சிக்காக நீண்டகாலம் உழைத்த ஒருவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாக அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவியது. அதனைச் சமாதானம் செய்ய அவருக்கு விசிக முதன்மை செயலாளர் பொறுப்பை திருமாவளவன் வழங்கியபோதிலும், தேர்தல் முடிவுகளுக்குப் பின் அமைச்சரவையில் விசிக பங்கேற்றது உள்ளிட்ட முக்கிய நகர்வுகளில் ஆளூர் ஷாநவாஸ் எவ்வித வெளிப்படையான கருத்தும் தெரிவிக்காமல் அமைதி காத்து வந்தார்.
இந்த அமைதிக்கான காரணம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த மே 21ஆம் தேதி இரவு, திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை ஆளூர் ஷாநவாஸ் ரகசியமாகச் சந்தித்து சுமார் 45 நிமிடங்கள் பேசியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சந்திப்பின் போது, தவெக அரசுக்கு விசிக ஆதரவு அளித்ததிலும் அமைச்சரவையில் இணைந்ததிலும் தனக்கு உடன்பாடில்லை எனக் கூறிய ஷாநவாஸ், தான் திமுகவில் இணையத் தயாராக இருக்கும் மனநிலையையும் வெளிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. எனினும், திமுக தலைமை “இப்போதைக்கு பொறுமையாக இருங்கள்” என்று அவருக்கு அறிவுறுத்தியதாகப் பேசப்படுகிறது.
இத்தகைய பரபரப்பான சூழலில், ஆளூர் ஷாநவாஸைத் தக்கவைத்துக் கொள்ள விசிக தலைவர் திருமாவளவன் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. தவெக-விசிக இடையேயான புதிய அதிகாரப் பகிர்வுப் பேச்சுவார்த்தைகளில், கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு வாரியத் தலைவர் பதவிகளுடன், ஆளூர் ஷாநவாஸுக்காக ஒரு மாநிலங்களவை (ராஜ்யசபா) உறுப்பினர் பதவியையும் விசிக கோரியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பனையூர் பாபுவின் விலகலைத் தொடர்ந்து, “விசிகவின் அடுத்தகட்ட நகர்வு என்ன? ஆளூர் ஷாநவாஸ் மாற்று அரசியல் முடிவை எடுப்பாரா?” என்ற கேள்விகள் தமிழக அரசியலில் தற்போதைய ஹாட் டாபிக்காக மாறியுள்ளன.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மூத்த தலைவர்களான எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் ஆகியோர் தலைமையில் 25 எம்.எல்.ஏக்கள்…
குஜராத் மாநிலம் நவாபுரா பகுதியில் வாரிசு வேண்டி 40 வயது பெண் ஒருவரை, அவரது மாமனார் மற்றும் நாத்தனாரின் கணவர்…
உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, மனைவி மற்றும் அவரது தங்கை தங்களது காதலர்களுடன்…
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராம காட்டுப்பகுதியில், கடந்த மார்ச் 11 ஆம் தேதி பிளஸ் 2…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், தற்போதைய தவெக அரசை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.…
தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் குற்றச்சம்பவங்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு குறித்த விமர்சனங்கள் அரசியல் அரங்கிலும் பொதுமக்கள் மத்தியிலும்…