தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் புஷ்பா திரைப்படம் பார்க்க வந்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் உயிரிழந்த நிலையில் அவருடைய மகன் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்து வருகின்றார். கோமா நிலையில் இருக்கும் சிறுவனின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் உடலில் அசைவுகள் இருப்பதாகவும் உணவு தொடர்ந்து பைப் மூலமாக செலுத்தப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அல்லு அர்ஜுன் மற்றும் புஷ்பா பட தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவிஸ் உரிமையாளர் உட்பட 18 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இருந்தனர்.
இந்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட அல்லு அர்ஜுனனுக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியதால் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் இதே வழக்கில் நேற்று அல்லு அர்ஜுனிடம் மீண்டும் விசாரணைக்கு காவல் நிலையத்தில் போலீசார் வரவழைத்து மூன்று மணி நேரத்திற்கு மேல் விசாரித்தனர். இந்த நிலையில் இன்று தெலுங்கானா மாநில திரைப்பட வளர்ச்சிக் கழக தலைவர் திரைப்படத் தயாரிப்பாளர் தில் ராஜு, புஷ்பா படத்தின் தயாரிப்பாளர் அல்லு அரவிந்த், மைத்திரி மூவிஸ் நிர்வாகத்தினர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள சிறுவனை நேரில் சென்று பார்த்தனர்.
மருத்துவர்களிடம் சந்தித்து பேசி சிறுவனின் உடல்நிலை குறித்து விவரங்கள் கேட்டு தெரிந்து கொண்டனர். அதன் பிறகு பாதிக்கப்பட்ட ரேவதி குடும்பத்திற்கு இரண்டு கோடிக்கான காசோலையை பட குழுவினர் வழங்கினர். இதில் அல்லு அர்ஜுன் சார்பாக ஒரு கோடியும், புஷ்பா படத்தின் தயாரிப்பு நிறுவனம் சார்பாக 50 லட்சமும், இயக்குனர் சுகுமார் வெளிநாட்டில் உள்ளதால் அவருடைய தரப்பில் அவரது அண்ணன் அசோக் 50 லட்சம் என மொத்தம் இரண்டு கோடி வழங்கப்பட்டதாக அல்லு அர்ஜுன் தந்தை அல்லு அரவிந்த் தெரிவித்துள்ளார்.
பிரபல யூடியூபர் கௌரவ் தனேஜா தான் வாங்கிய தர்பூசணி ஒன்றில் இருந்து நுரை பொங்கி வழியும் வீடியோவை சமூக வலைதளங்களில்…
மத்தியப் பிரதேச மாநிலம் கர்கோன் மாவட்டத்தில், திருமணச் சடங்கின் போது பூசப்பட்ட மஞ்சள் அலர்ஜியானதால் மணப்பெண் ஒருவரின் முகம் வீங்கிப்போன…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், புதர்கள் நிறைந்த ஒரு பகுதியில் நாய்க்கும் ராஜநாகத்திற்கும் இடையே நடந்த கடுமையான…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பாலாஜி கோயில் வளாகத்தில், டெலிவரி பாய் வேடத்தில் வந்த வாலிபர்…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், கிராமப்புறத்தைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர் தங்களின் கைவினைத் திறமையால் ஒரு சிறிய…
ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் குடும்பத் தகராறு காரணமாக தந்தை ஒருவரே தனது 5 வயது மகனைக் கொலை செய்துவிட்டு, தானும்…