தமிழக அரசியல் களம் தற்போது சூடு பிடிக்க தொடங்கியுள்ள நிலையில் அதிரடியான மாற்றங்களை சந்தித்து வருகிறது. டெல்லியில் அமித்ஷா உடனான சந்திப்புக்கு பின்னர் டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக, அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் இணைவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. எடப்பாடி பழனிச்சாமியும் அதற்கு கிரீன் சிக்னல் காட்டியுள்ளதாக தெரிகிறது. தென் மாவட்டங்களில் டிடிவி தினகரனின் வாக்கு வங்கியை அதிகரிப்பதன் மூலம் திமுகவை வீழ்த்த முடியும் என்று எதிர்க்கட்சிகள் கணக்கு போடுகின்றன.
மறுபக்கம் ஓபிஎஸ் ஒரு புதிய பாதையை தேர்ந்தெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சியுடன் ஓபிஎஸ் கூட்டணி அமைக்க தீவிரம் காட்டி வருகின்றார். ஓபிஎஸ் விஜயின் புதிய அரசியல் வேகத்திற்கு ஒரு அனுபவமிக்க பலமாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு பேரும் நகர்வுகளும் தமிழக அரசியல் களத்தை மாற்றி அமைக்க போகிறது. இதனால் இனி வரும் நாட்களில் தேர்தல் களம் பரபரப்பாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
