தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் தற்போது அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிரமாக தேர்தல் பணியில் இறங்கியுள்ளனர். மறுபக்கம் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில் NDA கூட்டணியில் இருக்கிறீர்களா இல்லையா என்று டிடிவி தினகரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு இந்த கேள்வியை நயினார் நாகேந்திரனிடமே கேளுங்கள், அவர் பதிலளித்தால் எங்களுக்கும் நன்றாக இருக்கும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஓபிஎஸ் போலவே டிடிவி தினகரனை சேர்க்க முடியாது என்பதில் இபிஎஸ் விடாப்பிடியாக இருப்பதும் அதன் பின்னணியில் விஜய் தனி கூட்டணி அமைப்பது குறித்து டிடிவி தினகரன் பேசியதாகவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
