ரேஷன் பொருள்களை தொடர்ந்து பெற வேண்டும் என்றால் இனி ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை இ கேஒய்சி செய்வது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் e-KYC அப்டேட்டை எளிதாக முடிப்பதற்கு மேரா ரேஷன் மற்றும் ஆதார் பேஸ் ஆர் டி ஆகிய இரண்டு செயலிகளை பயன்படுத்துவதற்கு அரசு அறிவுறுத்தி உள்ளது.
ரேஷன் அட்டைதாரர்கள் இ கேஒய்சி அப்டேட்டை ஆன்லைன் மூலம் செய்வது எப்படி?
முதலில் உங்களுடைய மொபைல் போனில் Google play store சென்று Mera Ration மற்றும் aadhaar face RD ஆகிய இரண்டு செய்திகளையும் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
அடுத்து Mera Ration செயலியை திறந்து உங்களுடைய இருப்பிடத்தை பதிவு செய்து ஆதார் எண்ணை உள்ளிட்டு கேப்சாவை நிரப்பி ஓடிபி மூலம் சரிபார்க்க வேண்டும்.
அதன் பிறகு உங்களுடைய ஆதார் தொடர்பான தகவல்கள் அனைத்தும் திரையில் தோன்றும்.
பிறகு Face e-KYC விருப்பத்தை தேர்வு செய்து கேமரா ஓப்பன் ஆனதும் உங்களுடைய முகத்தை ஸ்கேன் செய்ய வேண்டும்.
Aadhaar Face RD என்ற செயலி தானாகவே உங்களுடைய முகத்தை ஆதார் தரவுகளுடன் ஒப்பிட்டு சரிபார்க்கும்.
இறுதியாக உங்கள் முகத்தை ஸ்கேன் செய்த பிறகு சில வினாடிகளில் உங்களுடைய இ.கே வயசு செயல்முறை நிறைவடைந்து விடும்.
e-kyc அப்டேட் முடிந்து விட்டதா என்று சரி பார்ப்பதற்கு மீண்டும் Mera Ration செயலியில் உள் நுழைய வேண்டும்.
உங்களுடைய இருப்பிடம் மற்றும் ஆதார் விவரங்களை நிரப்பி ஓடிபி உள்ளிட வேண்டும்.
அதன் பிறகு திரையில் தோன்றும் நிலையை கவனிக்கவும்.
நிலை 1 yes என்று தோன்றினாள் உங்களுடைய கேஒய்சி வெற்றிகரமாக முடிந்தது என்று அர்த்தம்.
நிலை 2 NO என்று தோன்றினாள் உங்களுடைய கே வயசு அப்டேட் இன்னும் முழுமை அடையவில்லை என்று அர்த்தம். நீங்கள் ரேஷன் கார்டு அப்டேட் செயல்முறையை மீண்டும் செய்ய வேண்டி இருக்கும்.
