தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேசமயம் வங்க கடலில் வருகின்ற நவம்பர் 22ஆம் தேதி அதாவது நாளை புயல் சின்னம் உருவாக உள்ள நிலையில் இன்று 10 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று இரவு கனமழை கொட்டி தீர்த்த நிலையில் இன்று குமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், கடலூர், மயிலாடுதுறை, நாகை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதனால் மழைப்பொழிவை பொறுத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படலாம். அப்படி இல்லாவிட்டால் பள்ளி செல்லும் மாணவர்கள் கூடை மற்றும் ரெயின் கோட் ஆகியவற்றை எடுத்துச் செல்வது நல்லது.
