அடப்பாவி இப்படியா பண்ணுவ?… இரவில் பைக்கை பறிமுதல் செய்த போலீஸ்… பதிலுக்கு போலீஸ் ஜிப்பை வீட்டிற்கு எடுத்துச் சென்ற போதை ஆசாமி…!

Spread the love

ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டத்தில் உள்ள ஆளூர் பகுதியை சேர்ந்த யுவராஜ் என்பவர் கடந்த புதன்கிழமை இரவு மது போதையில் வாகனம் ஓட்டி சென்றார். அப்போது அவரை கைது செய்த போலீசார் அவருடைய பைக்கை பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை காலை போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற யுவராஜ் தன்னுடைய பைக்கை திருப்பித் தருமாறு கேட்டுள்ளார். ஆனால் விதிமுறைகளை காரணம் காட்டி போலீசார் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் கோபமடைந்த யுவராஜ், என்னுடைய பைக்கை தராவிட்டால் உங்கள் போலீஸ் ஜிப்பை எடுத்துச் சென்று விடுவேன் என்று கூறியுள்ளார்.

அவர் மதுபோதையில் பேசுவதாக நினைத்த போலீசார் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் யுவராஜ் சொல்லியது போலவே அங்கு நின்று கொண்டிருந்த போலீஸ் ஜீப்பை ஸ்டார்ட் செய்து, நேராக தன்னுடைய வீட்டுக்கே ஓட்டி சென்றுள்ளார். வீட்டுக்கு வந்த பிறகு மது போதையில் பேச முடியாத நிலையில் அவர் தள்ளாடி விழுந்தார். இதனை கவனித்த அவருடைய அண்ணன் உடனடியாக போலீஸ் வாகனத்தை காவல் நிலையத்திற்கு திருப்பிக் கொண்டு சென்று ஒப்படைத்தார். இதனைத் தொடர்ந்து போலீசார் யுவராஜ் மீது வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் அவரிடம் விசாரணை நடத்த உள்ளனர்.

Nanthini

Recent Posts

“700 ரூபாய் வந்தே பாரத் டிக்கெட் வெறும் 380 ரூபாய்க்கு விற்பனை! ‘சைடு வருமானம்’ பார்த்த டிடிஇ அதிரடி சஸ்பெண்ட் – வைரல் வீடியோ பின்னணி..!!

வந்தே பாரத் விரைவு ரயிலில் பயணம் செய்த பயணி ஒருவருக்கு, 700 ரூபாய் மதிப்புள்ள டிக்கெட்டை வெறும் 380 ரூபாய்க்கு…

3 மணத்தியாலங்கள் ago

திக் திக்..! காட்டில் ஒரு நேரடி வேட்டை… நேரம் பார்த்து பசுவை குறிவைத்த சிங்கம்… மிரண்டுபோன சுற்றுலாப்பயணிகள்… இணையத்தில் வைரலாகும் அரிய வீடியோ…!!

குஜராத் மாநிலம் கிர் தேசிய பூங்காவில் சஃபாரி சென்ற சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பெரும் வியப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தும் விதமாக…

3 மணத்தியாலங்கள் ago

“கம்பெனிக்காரனே கலங்கிப்போயிருப்பான்!” சொகுசு பைக்கை லோடு வண்டியாக்கிய பெண்… “₹2 லட்சம் மதிப்புள்ள ஸ்போர்ட்ஸ் பைக்கில் பழைய இரும்பு வியாபாரம்… இணையத்தை அதிரவைத்த வீடியோ..!!

சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ராஜஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது 'தேசி ஜுகாட்' (உள்ளூர்…

3 மணத்தியாலங்கள் ago

BREAKING: ​நீட் UG 2026 தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம்.. சிபிஐ அதிகாரப்பூர்வமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை..!!

நீட் (NEET UG) தேர்வில் வினாத்தாள் கசிவு ஏற்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக சிபிஐ (CBI) அதிகாரப்பூர்வமாக வழக்குப் பதிவு…

3 மணத்தியாலங்கள் ago

“டிரைவர் மகன் டூ அரசு கொறடா” விருகம்பாக்கம் சபரிநாதனுக்கு முக்கியப் பொறுப்பு வழங்கி முதல்வர் விஜய் அதிரடி..!!

தமிழக அரசின் கொறடாவாக விருகம்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சபரிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். முதலமைச்சர் விஜய்யின் ஓட்டுநராகப் பணியாற்றிய ராஜேந்திரனின் மகனான…

3 மணத்தியாலங்கள் ago

தவெக MLA தகுதி நீக்கம்..? ஆளுநருக்கு பறந்த பரபரப்பு கடிதம்… மறைக்கப்பட்ட அந்த உண்மை.. அதிர்ச்சியில் விஜய்…!!

தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், சேலம் மேற்கு தொகுதி தவெக எம்.எல்.ஏ லட்சுமணனை தகுதி நீக்கம்…

3 மணத்தியாலங்கள் ago