தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக பலம் வந்து கொண்டிருப்பவர் தான் நாகர்ஜுனா. இவர் தமிழில் ரஜினியின் கூலி திரைப்படத்திலும் தெலுங்கில் தனுஷ் நடிக்கும் குபேரா திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார். அண்மையில் நாகர்ஜூனா மற்றும் அமலா தம்பதிகளின் மூத்த மகன் நாகச் சைதன்யா மற்றும் சோபிதா திருமணம் நடைபெற்றது. அடுத்து இவர்களது இளைய மகனான அகில் அக்கினேனி — ஜைனட் ரவ்ட்ஜி இருவருக்கும் திருமணம் நடைபெற்று உள்ளது. ஹைதராபாத்தில் உள்ள நாகார்ஜுனாவின் வீட்டில் எளிமையாக திருமணம் நடைபெற்றது.

நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து புதுமண தம்பதிகளுக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மணமகள் ஜைனப் மும்பையில் ஒரு ஓவியராகவும் வாசனை திரவியம் தயாரிப்பாளராகவும் உள்ளார். இவர் ஹைதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் சுல்பிராவ்ஜி-இன் மகள்.
ஜூன் எட்டாம் தேதி ஹைதராபாத்தில் உள்ள நாகார்ஜுனா குடும்பத்தினருக்கு சொந்தமான அன்னபூர்ணா ஸ்டுடியோவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடைபெற்றது. இப்படியான நிலையில் சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட அகில்-ஜைனப் இருவரின் திருமண வயது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் 9 வயது வித்தியாசம் உள்ளதாம், அகிலுக்கு 30 வயது, ஜைனப்பிற்கு 39 வயது ஆகிறது என கூறப்படுகிறது.
