தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக கலக்கிக் கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித். சுமார் இரண்டு வருட இடைவேளைக்கு பிறகு ரசிகர்களின் நீண்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் அஜித் நடிப்பில் வெளியான விடாமுயற்சி திரைப்படம் தோல்வியை சந்தித்தது. இது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்தது. ஆனால் அதன் பிறகு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தத் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் அஜித் ரசிகர்களால் இந்த திரைப்படம் பெரிதும் கொண்டாடப்பட்டது.
Made for each other ❤️ The cutest duo ever – Thala Ajith & #Shalini Mam 🥰#AjithKumar #ShaliniAjithKumar pic.twitter.com/QqBfYXQjx9
— AJITH FANS COMMUNITY (@TFC_mass) August 9, 2025
இதனைத் தொடர்ந்து அஜித்தின் 64 வது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்க போவதாக உறுதியாகிவிட்டது. இந்த நிலையில், நடிகர் அஜித் மற்றும் ஷாலினி இருவரும் வரலட்சுமி விரதத்தில் கலந்துகொண்டபோது அஜித் தனது மனைவிக்கு குங்குமம் வைத்து விடுகிறார். ஷாலினி அஜித்தின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகிறார். அப்போது அஜித் நான் வீட்டுல போயி காலில் விழணும் என்று ஜாலியாக பேசியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
