வசூல்ராஜா படம் உருவாக முக்கிய காரணமே அஜித் தான்.. பல வருடம் கழித்து இயக்குனர் சொன்ன சீக்ரெட்..!

By Nanthini on கார்த்திகை 10, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித். இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. தொடர்ந்து சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் இவர் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். மறுபக்கம் கார் ரேசிலும் கவனம் செலுத்தி வருகின்றார். விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு இரண்டு வருடங்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்னும் நிறைவடையாமல் இருந்து வருகிறது. இதற்குப் பிறகு தொடங்கிய குட் பேட் அக்லி திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏறத்தாழ முடிவடைந்து விட்டதாக கூறப்படுகின்றது.

Sets of Chennai locations erected at Hyderabad for Ajith Kumar's 'AK61'  shooting! - Hot update - Tamil News - IndiaGlitz.com

   

இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில் விடாமுயற்சி படமும் பொங்கலுக்கு வெளியாகும் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் பிரபல இயக்குனர் சரண் அஜித் குறித்து சில விஷயங்களை சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசியுள்ளார். அஜித்தை வைத்து காதல் மன்னன், அமர்க்களம் மற்றும் அட்டகாசம் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் தான் சரண். அஜித்தின் ஆசானை இயக்குனர் என்று இவரை கூறலாம்.

   

Ajith: தீவிர ரசிகரா இருப்பாரோ?!… கமல்ஹாசனுக்காக அஜித் செய்த விஷயம்…  இயக்குனர் சொன்ன சீக்ரெட்..! - CineReporters

 

இவர் நடிகர் அஜித் பற்றி நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், நடிகர் அஜித்தை வைத்து அட்டகாசம் திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருந்தபோது தனக்கு கமல்ஹாசன் உடன் இணைந்து வசூல்ராஜா திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு வந்தது. வசூல்ராஜா படத்தை உடனடியாக எடுத்து முடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அந்த சமயத்தில் அட்டகாசம் படத்தை எடுப்பதா அல்லது வசூல்ராஜா படத்தை எடுப்பதா என்று நான் குழப்பத்தில் இருந்தேன்.

சிரிச்சு சிரிச்சு கண்ணீர் வரவழைத்த 5 படங்கள்.. போலி டாக்டராக இருந்து கமல்  செய்த அட்டகாசம் - Cinemapettai

அப்போது அஜித் தன்னிடம் மிகவும் சந்தோசமாக கமல் சாரோட படம் கிடைக்கிறது எல்லாம் மிகப்பெரிய வாய்ப்பு, நீங்க முதலில் போய் கமல் சாரோட படத்தை எடுத்து முடிங்க அப்புறம் நம்ம படத்தை பார்த்துக்கலாம், அதுக்குள்ள நானும் வேறு ஒரு படத்துல நடிச்சிட்டு வரேன் அப்படின்னு எனக்கு ஆறுதல் சொன்னாரு. அப்போதுதான் நடிகர் அஜித் கமல் சார் மீது எவ்வளவு பெரிய மரியாதையும் அன்பும் வைத்திருக்கிறார் என்பதை எனக்கு புரிந்தது என்று சரண் அந்த பேட்டியில் பேசியுள்ளார்.