தமிழ் சினிமாவில் கமல் மற்றும் ரஜினியை தொடர்ந்து மிகப்பெரிய நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும் விஜய். இவர்கள் இருவருக்கும் நேரடியாக மற்றும் மறைமுகமாக மோதல்கள் பல வருடங்களாக இருந்து வருகின்றது. ரஜினி, கமல் ஆகிய இருவரும் இடையில் போட்டி நடைபெறுவதாக இருந்தாலும் கூட அவர்கள் சண்டை போட்டுக் கொண்டது கிடையாது. கமல் படத்தை பார்த்தால் உடனே ரஜினி அவருக்கு போன் செய்து பாராட்டி விடுவார்.
இவர்களின் நட்பு தற்போது வரை நாகரீகமாக இருந்து வருகின்றது. விஜய் தனது சினிமா போட்டியாக அஜித்தை பார்ப்பதும், அஜித் விஜய் பார்ப்பதும் பல வருடங்களாக தொடர்ந்து வருகின்றது. இதனை அவர்கள் நேரடியாக தெரிவிக்கவில்லை என்றாலும் பாடல்கள் மூலமாகவும் வசனங்கள் மூலமாகவும் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்கின்றனர்.
இருவருமே துவக்கத்தில் காதல் கதையில் நடிக்க தொடங்கி பின்னர் ஆக்சன் படங்களில் நடிக்க ஆரம்பித்தனர். இப்படி படிப்படியாக முன்னேறிய இருவரும் வியாபாரம், சம்பளம், அதிக ரசிகர்கள் என அனைத்திலும் முன்னிலை வகித்து வந்தார்கள். அஜித்தை காட்டிலும் விஜய் எப்போதும் ஒரு படி முன்னே இருப்பார். இது அஜித்துக்கும் தெரியும். பொதுவாக விஜய் படங்கள் வெளியாகும் போது அஜித் படங்கள் வெளியாகாது.
ஆனால் சமீபத்தில் விஜயின் வாரிசு படமும் அஜித்தின் துணிவு படமும் வெளியாகி துணிவு திரைப்படமே வெற்றியை கொடுத்தது. அதை தொடர்ந்து தற்போது விஜய் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். அஜித் தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை முடித்தவுடன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கின்றது.
இந்நிலையில் விஜயின் லியோ திரைப்படம் வெளியாகும் அக்டோபர் 19ஆம் தேதி அன்று அஜித்தின் 63 வது திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறி வருகிறார்கள். ஏனென்றால் லியோ திரைப்படம் வெளியானால் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கங்களில் விஜய் பற்றி பேசுவார்கள். அதை திசை திருப்புவதற்காகவே தற்போது அஜித் இதை திட்டமிட்டு இருக்கின்றார் என்று கூறப்படுகின்றது.
நடிகர் விஜய்யின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு த்ரிஷா அவருக்கு வாழ்த்து தெரிவிக்காததும், அவரை இன்ஸ்டாகிராமில் அன்ஃபாலோ செய்துவிட்டதாக எழுந்த வதந்திகளும்…
சீனாவின் சிச்சுவான் மாகாணத் தெருக்களில் மனிதனைப் போன்ற தோற்றம் கொண்ட 'ஹியூமனாய்டு' ரோபோ ஒன்று மண்டியிட்டு, கைகளைக் கூப்பி பிச்சை…
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது, முதலமைச்சர் விஜய் "டாஸ்மாக் கட்சி நிதி" எனக் குறிப்பிட்டதாகக் கூறி திமுக…
தமிழக வெற்றி கழகம் தனது தேர்தல் அறிக்கையில் பல்வேறு அதிரடி வாக்குறுதிகளை வழங்கி மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.…
சட்டசபையில் இன்று முதல்-அமைச்சர் விஜய் பேசிக்கொண்டிருந்தபோது, தங்களைப் பேச சபாநாயகர் அனுமதிக்கவில்லை என்று கூறி திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். அதன்…
பசிபிக் பெருங்கடலில் கடல் மட்டமும், வெப்பநிலையும் மிக வேகமாக உயர்ந்து வருவதை நாசாவின் 'Sentinel-6' செயற்கைக்கோள் கண்டறிந்துள்ளது. இது 'சூப்பர்…