Categories: சினிமா

“என்னால அதுக்கு மேல நடிக்க முடியாது”.. ‘விடாமுயற்சி’ ஷூட்டிங்கில் டைரக்டருக்கு நெருக்கடி கொடுத்த அஜித்..

Spread the love

நடிகர் அஜீத்குமார் நடித்துவரும் விடாமுயற்சி படப்பிடிப்பு, இப்போது அஜர்பைஜானில் நடந்து வருகிறது. முதல்கட்ட ஷூட்டிங் முடிந்த நிலையில், இப்போது 2வது கட்ட ஷூட்டிங் கடந்த 15 தினங்களாக நடந்து வருகிறது. வரும் 2024ல் பிப்ரவரி மாதம் 2வது வாரம் வரை இந்த ஷூட்டிங்கை தொடர்ந்து 70 நாட்களுக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு படக்குழு அஜர்பைஜானில் இருந்து சென்னை திரும்பிவிடும். போஸ்ட் புரடக்சன் பணிகளை அடுத்து படம் வெளியீடு தேதி முறையாக அறிவிக்கப்படும். அஜீத் பிறந்த தினமும், உழைப்பாளர் தினமுமான வரும் மே 1ம் தேதி விடாமுயற்சி படம் திரைக்கு வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

#image_title

விடாமுயற்சி படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்துவரும் நிலையில், குளிர்பிரதேசம் என்பதால் மாலை 5,6 மணிக்கெல்லாம் இருட்டு சூழ்ந்துவிடுகிறது. ஏனெனில் இதுபோன்ற நாடுகளில் பகல் வேளைகளில் குறைந்த நேரமே சூரியவெளிச்சம் இருக்கும். பின்னர் குளிரத் துவங்கிவிடும். அதனால் படப்பிடிப்பை மாலை 5 அல்லது 6 மணிக்குள் முடித்துக்கொள்ளுமாறு படத்தின் ஹீரோ அஜீத்குமார், இயக்குநர் மகிழ் திருமேனிக்கு நெருக்கடி தந்து வருவதாக ஒரு தகவல் வைரலாகி வருகிறது.

#image_title

அதாவது குளிர்பிரதேச நாடுகள், வெளிநாடுகளுக்கு தமிழ் சினிமாவினர் ஷூட்டிங் சென்றால் வழக்கமாக இரவு நேரங்களில் மதுபானம் அருந்துவது வழக்கம். ஏனெனில் குளிரை சமாளித்தாக வேண்டும். தவிர, வௌிநாடு என்பதால் அதுவும் ஒரு உற்சாகம் தரும் ஒரு பானமாக இருக்கும் என்பதால்தான். ஆனால் அசைவம் சாப்பிடுவது, இதுபோன்ற போதை என அனைத்தையும் கைவிட்டுவிட்ட அஜீத்குமார்,

குளிரை சமாளிக்க முடியாமல் மாலை 6 மணிக்குள் ஷூட்டிங்கை முடித்துவிடுங்கள் என இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினரை அவசரப்படுத்தி நெருக்கடி தருகிறார். இது படக்குழுவினரை பயங்கர அப்செட் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மாலை வேளைகளில் சூரிய வெளிச்சம் போதிய அளவில் இல்லை என்றாலும், லைட்டிங் மூலம் படப்பிடிப்பை நடத்தி விட முடியும். ஆனால், குளிர் அதிகமாக உள்ளது என படப்பிடிப்பை சீக்கிரம் முடிக்க சொன்னால், எப்படி முடிப்பது என படக்குழுவினர் புலம்பி வருகின்றனர்.

admin

Recent Posts

இரத்தக் களரியான இலங்கை சிறைச்சாலை… தடுத்த போலீசாருக்கு நேர்ந்த கொடூரம்… போர்க்களமாக மாறிய நீர்கொழும்பு ஜெயில்…!

இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…

28 minutes ago

அயோத்தி ராமர் கோயில் விவகாரம்… டெலிட் செய்யப்பட்ட வீடியோவில் சிக்கிய ஆதாரம்… அம்பலமான அதிர்ச்சி உண்மை…!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…

41 minutes ago

திடீரென அணைந்த விளக்குகள்… காட்டுமன்னார்கோவில் அரசு மாளிகையில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி… காரில் தவித்த சௌமியா அன்புமணி… என்ன நடந்தது…?

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…

53 minutes ago

பயங்கர வெள்ளத்தில் சிக்கிய சொகுசு கார்கள், புல்டோசர்கள்… காஷ்மீரில் விடிய விடிய நடந்த கோரத்தாண்டவம்… நடுங்க வைக்கும் வீடியோ…!

ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…

1 மணத்தியாலம் ago

இன்ஸ்டா கள்ளக்காதல் விபரீதம்… ஆண் நண்பர்களுக்கு நிர்வாண… வீடியோ அனுப்பிய மனைவி… காட்டுக்குள் வீசிவிட்டு தப்பிய கணவர் அதிரடி கைது…!!

கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…

1 மணத்தியாலம் ago