Categories: சினிமா

ஷூட்டிங் ஸ்பாட்டில், வரம்பு மீறி நடந்துக்கொண்ட வடிவேலு.. 21 வருஷமா அஜித்துடன் நடிக்காததுக்கு இது தான் காரணமா..

Spread the love

நடிகர் அஜீத்குமார், இப்போது தமிழ் சினிமாவில் உள்ள டாப் ஹீரோக்கள் வரிசையில் ரஜினி, கமல், விஜய், அஜீத் என நான்கு பேரில் ஒருவராக இருக்கிறார். இவரது படங்களில் நடிக்க நடிகர்களுக்குள், இவரது படங்களை இயக்க இயக்குநர்களுக்குள் கடும் போட்டி நிலவுகிறது. ஏனென்றால் இவரது படங்களுக்கு அந்தளவுக்கு சினிமா மார்க்கெட்டில் பலத்த வரவேற்பு உள்ளது. அஜீத் நடித்த படங்களில் காமெடி சீன்களில் நடித்த பலரும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றனர்.

அந்த வகையில் வையாபுரி, கருணாஸ், ரோபோ சங்கர், மயில்சாமி, விவேக், தாமு, தாடி பாலாஜி, ரமேஷ் கண்ணா என பலரும் அஜீத்குமாருடன் அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றனர். ஆனால், அஜீத்குமாருடன் நடிகர் வடிவேலு ஒரு கட்டத்துக்கு பிறகு நடிக்கவில்லை. அதாவது கடந்த 21 ஆண்டுகளாக தனது படங்களில் நடிக்கும் வாய்ப்பை, நடிகர் வடிவேலுவுக்கு அஜீத்குமார் தர மறுத்துவிட்டார். அவருக்கு என் படங்களில் இடமில்லை என்று அஜீத்குமாரே, வாய்மொழி உத்தரவாக கூறியது, 21 ஆணடுகளுக்கு முன்னால் நடந்துள்ளது.

கடந்த 2002ம் ஆண்டில் இயக்குநர் எழில் இயக்கத்தில் வெளிவந்த படம் ராஜா. ரோஜா, பிரியங்கா திரிவேதி, லிவிங்ஸ்டன், வையாபுரி உள்ளிட்டோர் நடித்த இந்த படத்தில் வடிவேலுவும் அஜீத் நண்பராக நடித்திருப்பார். இந்த படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்த போது ஷூட்டிங் ஸ்பாட்டில், ஹீரோ என்ற மரியாதை சிறிதும் இன்றி அஜீத்குமாரை வாடா, போடா, டேய் மச்சா என்று ஒருமையில் பேசி இருக்கிறார் வடிவேலு. இதுகுறித்து படத்தின் இயக்குநர் எழில், வடிவேலுவிடம் பேசியும், அப்படி டயலாக் இல்லையே என்று கூறியும் வடிவேலு அதை கேட்கவில்லை.

அஜீத்தை விட இப்போ எனக்குதான் மார்க்கெட் இருக்கு என்கிற தொனியில் தெனாவெட்டாக நடந்துள்ளார். இதனால் ஒரு கட்டத்தில் கடும் கோபமடைந்த அஜீத்குமார், இனிமேல் என் படங்களில் வடிவேலுவுக்கு வாய்ப்பில்லை என்ற தீர்க்கமான முடிவுக்கு வந்துவிட்டார். அதனால்தான், 21 ஆண்டுகளாக அஜீத் படங்களில் வடிவேலு நடிக்க வாய்ப்பின்றி போனது.

admin

Recent Posts

பணம் பறிக்க நடந்த கொடூரமா?… அமெரிக்காவில் 28 வயது இந்தியர் துள்ளத்துடிக்கக் கொலை… கதறி அழும் பெற்றோர்…!!

நியூயார்க்கின் புரூக்ளின் பகுதியில் பீட்சா விநியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த 28 வயதான இந்திய இளைஞர் குர்தீப் சிங், ஈவு…

3 minutes ago

அடச்சீ… பொம்பள மேல கையை வைப்பியா?… காக்கிச் சட்டையைக் கிழித்து… தர்ம அடி கொடுத்த சகோதரிகள்… நடுரோட்டில் அதிரவைக்கும் சம்பவம்…!!

உன்னாவ் பகுதியில் இ-ரிக்‌ஷா ஒன்றை ஓரமாக நிறுத்துவது அல்லது அகற்றுவது தொடர்பாக, பணியில் இருந்த ஹோம் கார்டு காவலருக்கும் இ-ரிக்‌ஷா…

9 minutes ago

அடச்சீ… நீயெல்லாம் என்ன ஜென்மம்… போட்டோவை வெளியிடுவேன்… பிளாக்மெயில் செய்த முன்னாள் தோழன்… இளம்பெண் எடுத்த விபரீத முடிவு… பெங்களூருவை உலுக்கிய சம்பவம்…!

பெங்களூரு எச்.எஸ்.ஆர் லேஅவுட்டில் உள்ள அகரா ஏரியில், நகைக்கடையில் பணியாற்றி வந்த 22 வயது பெண் வாணிஸ்ரீ சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.…

10 minutes ago

நம்பிக்கைத் துரோகம்…! 3 ஆண்டுகள் உழைத்த பெண்ணை நடுத்தெருவில் நிறுத்திய ‘Dr. Realtor’… சம்பளம் கேட்டதால் வந்த வினை…!!

டேராடூனைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், 'டாக்டர் ரியால்டர்' என்ற நிறுவனத்தில் சுமார் மூன்று ஆண்டுகள் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய நிலையில், சொந்தமாகத்…

10 minutes ago

திக்.. திக்..! கொள்ளை நாடகம் ஆடிய கொலையாளிகள்… அசால்ட்டாக மாட்டியது எப்படி?… வெளிவந்த திடுக்கிடும் உண்மை…!!

வங்காளதேசத்தின் ரங்பூர் நகரில், ஓய்வுபெற்ற ஆசிரியரான கணேஷ் சக்ரவர்த்தி மற்றும் அவரது மனைவி பிரீதிலதா, பிள்ளைகளான ஆகாமி, பிரியம் ஆகிய…

19 minutes ago

“என் வாழ்நாளே போச்சு!”… ரூ.12 லட்சத்தை தின்று தீர்த்த எலிகள்… வங்கிக்கு போகாமல் வீட்டில் வைத்ததால் நேர்ந்த விபரீதம்…!!

உத்தரப்பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தங்க நகைகள் வாங்குவதற்காக பல ஆண்டுகளாகச் சேமித்த சுமார் 12…

29 minutes ago