அஜீத்துக்கு நேர்லே பத்திரக்கை கொடுத்தோம்.. அவர் பேசுனது ரொம்ப அநாகரிகம்.. கலைஞர் 100-க்கு அஜித் வராதது குறித்து பிரபல தயாரிப்பாளர் ஆவேசம்..

By Sumathi

Updated on:

சமீபத்தில் கலைஞர் 100 விழா சென்னை, கிண்டி ரேஸ்கோர்ஸில் நடந்தது. இந்த விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் பங்கேற்றனர். விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். ஆனால் விழாவுக்கு எதிர்பார்த்த கூட்டம் வரவில்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த விழாவுக்கு அஜீத்குமார், விஜய் வராதது மிகப்பெரிய பிரச்னையாக பார்க்கப்பட்டது. இதுகுறித்து பலரும் விமர்சித்தனர். ஆனால் விஜயகாந்த் மறைவுக்கே அஜீத்குமார் நேரில் வராதவர் என்பதால் இந்த விழாவுக்கு அவர் வருவதற்கான சாத்தியமே இல்லை என்றும் பேசப்பட்டது. அதேபோல், சென்னையில் இருந்தும் இந்த விழாவுக்கு அஜீத்குமார் வரவில்லை.

   

இதுகுறித்து திரைப்படத் தயாரிப்பாளர் கே ராஜன் சமீபத்தில் ஒரு நேர்காணலில் கூறியதாவது, இந்த விழாவில் அஜீத்குமார் கலந்துக்க மாட்டார் என்பது எல்லோருக்கும் தெரியும். மரியாதை நிமித்தமாக அஜீ்த்குமாருக்கு நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்தது உண்மை. ஆனால் அவர் வருவார், வரவேண்டும் என்பதற்காக கொடுக்கவில்லை. கொடுத்திருந்தால் வந்திருப்பேன் என்று அவர் பின்னால் சொல்லவிடக் கூடாது.

ஒருமுறை அவர் கருணாநிதி விழாவிலேயே என்னை கம்ப்பெல் பண்றாங்க, வற்புறுத்தறாங்க என்று மேடையில் அநாகரிகமாக பேசியவர். அதனால் அவர் வரமாட்டார் என்று தெரிந்தும் அனைவருக்கும் கொடுத்தது போல அவருக்கும் முறையாக கொடுக்கப்பட்டது. அவர் வரவில்லை. அது அவரது பழக்கம். யாரும், அவர் வருவாருன்னு எதிர்பார்க்கவில்லை.

விஜய் அவர் ஒரு கட்சி ஆரம்பிப்பதால் அது பிஸியாக இருந்து வருகிறார். விழா நடந்த போது அவர் சென்னையில் இருந்தாரா, வெளியூரில் இருந்தாரா என எனக்கு தெரியாது. ஆனால் அவர் கட்சி துவங்குவதால், இந்த விழாவில் ஏதும் கான்ட்ரவர்சியல் ஆகக் கூடாது என்பதால் கூட வராமல் இருந்திருக்கலாம். அவர் இப்போது கட்சி துவங்குவதில் மும்முரமாக இருக்கிறார். திருநெல்வேலிக்கு போய் நலத்திட்ட உதவிகளை செய்திருக்கிறார் நல்ல விஷயம்.

அதனால் அந்த வேலைகளில் மும்முரமாக இருந்ததால் வராமல் போயிருக்கலாம், என்று அந்த நேர்காணலில் பேசி இருக்கிறார் ராஜன். அதாவது அஜீத்குமார் வர வாய்ப்பே இல்லை என்று தெரிந்துதான் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது. அவர் வரமாட்டார் என்று தெரிந்தும் ஒரு மரியாதைக்காக அழைப்பிதழ் நேரில் தரப்பட்டது என தயாரிப்பாளர்களில் சீனியராக கே ராஜன் வெளிப்படையாக கூறியிருப்பது இப்போது வைரலாகி வருகிறது.

newproject 2021 09 08t190745 843 1631108276
author avatar
Sumathi