நடிகர் அஜீத்குமார் துபாயில் கார் ரேஸில் பங்கேற்று வருகிறார். அவர் ஓய்வாக இருக்கும் நேரங்களில் அவரது ரசிகர்களுடன் 3 நிமிடங்கள் தனது காரில் 2 ரவுண்டு அடிக்கிறார். இதில் ஒரு ரசிகருக்கு 3500 திராம் என கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சுமார் 40 பேர் வரை இதுவரை அஜீத்குமாருடன் இப்படி காரில் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அஜீத்குமார் மீது கடும் விமர்சனம் எழுந்தது.
ஆனால் இந்த கட்டணத்தை அந்த கார் ரேஸ் நடத்தும் துபாய் ஆட்டோ டிரம் நிறுவனம் தான் வசூலிக்கிறது. இதற்கு அஜீத்குமார் சம்மதிக்க காரணம், கார் ரேஸ் குறித்து இளம் வயதினர், தனது ரசிகர்கள் மத்தியில் ஒரு ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதுதானாம். இப்படி ரேஸ் காரில் தன்னுடன் பயணிக்கும் போது அந்த அனுபவம் கார் ரேஸ் மீதான ஆர்வத்தை அவர்களிடம் அதிகரிக்க செய்யும். கிரிக்கெட் போல கார் ரேஸ் குறித்தும் தனது ரசிகர்களிடம் விழிப்புணர்வும் ஆர்வமும் ஏற்படுத்தவே அஜீத்குமார் இப்படி செய்வதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
