வெற்றிநாயகன் என்று மகுடம் சூடிய இயக்குனரோடு கைகோர்க்கும் அஜித்.. இரண்டுமடங்காக எகிறும் எதிர்பார்ப்பு..

By Archana on ஆனி 6, 2024

Spread the love

அல்டிமேட் ஸ்டார் அஜித் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகும் விடாமுயற்சி படத்தில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு இந்த படத்தின் அறிவிப்பு வெளியானது. ஆனால் அடுத்தடுத்த சிக்கல்கள் காரணமாக படத்தின் ஷூட்டிங் தள்ளிப்போனது. இதற்கிடையே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்க அஜித் கமிட்டானார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தின் போஸ்டர் ரிலீஸ் ஆகி மக்களிடைய நல்ல வரவேற்பு பெற்றது. குட் பேட் அக்லி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷிடம் தற்போது பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

   

வருகிற பொங்கலுக்கு இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். படம் குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல் தளபதி விஜய் எச்.வினோத் இயக்கத்தில் தனது 69-ஆவது படத்தில் நடிக்க உள்ளார். ஏற்கனவே வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த கோட் திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆக உள்ளது. தனது 69-ஆவது படத்துடன் விஜய் சினிமாவை விட்டு விலகி அரசியலில் ஈடுபட போகிறார். இதனால் தளபதி அரசியலுக்கு சென்ற பிறகு சினிமா இயக்குனர்களின் முழு கவனமும் அஜித் மேல்தான் இருக்கும். அப்படி இருக்க இப்போது இருந்த அஜித் ஒவ்வொரு முன்னணி இயக்குனர்களையும் தொடர்பு கொண்டு பேசி வருகிறாராம். ஏற்கனவே எச்.வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய படங்களில் நடித்தார்.

   

 

இந்நிலையில் அஜித் எச்.வினோத்தை தொடர்பு கொண்டு எப்போது விஜய் படத்தை முடிப்பீர்கள் அடுத்து நாம் எப்போது ஒன்று சேர்ந்து நடிக்கலாம் என பேசியதாக தெரிகிறது. இது ஒருபுறம் இருக்க பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் இயக்கத்தில் அஜித் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தொடர்பு கொண்டு பேசினார்களாம். சங்கரின் கனவு ப்ராஜெக்ட்டாக இருப்பது வேள்பாரி நாவல். அந்த நாவலை விரைவில் சங்கர் இயக்குனர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வேள்பாரி படத்தில் அஜித் நடிக்க உள்ளாரா அல்லது வேறு படத்தில் ஹீரோவாக நடிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஷங்கர் இயக்கத்தில் அஜித் நடிக்க இருப்பதாக தகவல் உலா வருவதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். சங்கர் இயக்கத்தில் உருவான இந்தியன் 2 படம் வருகிற ஜூலை மாதம் ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.