மலை போல் நம்பி இருந்த படத்தை இப்படி மண் அள்ளி போட்டாங்களே.. கடும் அப்செட்டில் விஜய் சேதுபதி..

By Archana on ஜூன் 6, 2024

Spread the love

பிரபல இயக்குனரான விஜய் சேதுபதி தனது எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை தன்வசம் ஈர்த்தவர். ஹீரோ, குணச்சித்திர வேடம், வில்லன் என எந்த நூலாக இருந்தாலும் அதனை அசால்டாக செய்து அசத்துவார். கடந்த சில ஆண்டுகளாக விஜய் சேதுபதி வில்லனாக நடித்த படங்கள் சூப்பர் ஹிட் ஆனது. ஷாருக்கான் நடிப்பில் உருவான ஜபான் படத்திலும் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். ஆனால் சமீப காலமாக விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த படங்கள் தோல்வியை சந்தித்தது. தென்மேற்கு பருவக்காற்று திரைப்படம் மூலம் விஜய் சேதுபதி ஹீரோவாக திரையுலகில் என்ட்ரி கொடுத்தார்.

   

அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். குரங்கு பொம்மை படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் பயணத்தை ஆரம்பித்தவர் நித்திலன் சுவாமிநாதன் இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி தனது ஐம்பதாவது படத்தில் நடித்துள்ளார். அந்த படத்திற்கு மகாராஜா என பெயர் வைக்கப்பட்டுள்ளது. மகாராஜா படத்திற்கு அனீஸ் இசையமைத்துள்ளார். படத்தில் எடிட்டர் கிலோ மீட்டர் ராஜாவின் எடிட்டிங் வேற லெவலில் இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்த படத்தில் விஜய் சேதுபதி உடன் இணைந்து அனுராக், நட்டி நடராஜ், மம்தா மோகன் தாஸ், அபிராமி என ஏராளமானோர் நடிக்கின்றனர். வருகிற 14-ஆம் தேதி மகாராஜா படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

   

 

ஏற்கனவே மகாராஜா படத்தை பார்த்த பிரபலங்கள் படம் சூப்பராக இருப்பதாக கூறினர்.மேலும் பட குழுவினர் 50 இடங்களில் பிரிமியர் ஷோவை ரெடி செய்துள்ளனர். மகாராஜா படத்தின் பெரிய டுவிஸட் கிளைமாக்ஸ் காட்சிகள் தான் இருக்கிறதாம். ஏற்கனவே இந்த படத்தை பார்த்து ஏராளமானோர் கிளைமாக்ஸ் காட்சியை பற்றி வெளியே கூற ஆரம்பித்து விட்டார்களாம். படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் கிளைமாக்ஸ் காட்சிகள் பற்றிய செய்தி பட குழுமினாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.