அகோரி கெட்டப்பில் அஜித்.. ‘நான் கடவுள்’ படத்தில் அஜித் நடிக்கவிருந்தது உண்மை தானா…! அன்சீன் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ்..

By Begam on மார்கழி 22, 2023

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக  வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த ‘துணிவு’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதைத்தொடர்ந்து தற்போது ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் இயக்குனர்  மகிழ்திருமேனி இயக்கத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடித்த வருவதும் குறிப்பிடத்தக்கது.

   

தற்பொழுது விடாமுயற்சி திரைப்படத்தின் சூட்டிங் அஜர்பைஜானில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடிகர் அஜித் எப்பொழுதும் வித்தியாசமான கதைகள் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர். அப்படி தற்பொழுது நடிகர் அஜித் நடிக்க ஒப்புக்கொண்ட ஒரு படத்தின் போஸ்டர் தான் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அது எந்த திரைப்படம் தெரியுமா? இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட் ஆன ‘நான் கடவுள்’ திரைப்படம் தான்.

   

 

இத்திரைப்படத்திற்காக நடிகர் அஜித் நடத்திய போட்டோஷூட் ஸ்டில்கள் தான் தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.  இயக்குனர் பாலா இயக்கத்தில்   ‘நான் கடவுள்’ படத்தில் நடிப்பதற்காக  நீண்ட முடி எல்லாம் வளர்த்து போட்டோ சூட் எல்லாம் எடுக்கப்பட்டு நிறைவடைந்தது. இந்த படத்திற்கான பூஜை நடைபெற்றதோடு ஷூட்டிங்கும் தொடங்கியது.

அப்பொழுது அஜித்தின் சில போஸ்டர்களையும் படக்குழு ரிலீஸ் செய்திருந்தது. நான் கடவுள் லுக்கில் சாமியாராக நடிகர் அஜித் இருக்கும் அந்த போஸ்டர்கள் இணையத்தில் வெளியாகி படுவைரலும் ஆனது. ஆனால் திடீரென திரைப்படத்திலிருந்து நடிகர் அஜித் விலகினார் .அதன் பின்னர் ஆர்யாவை வைத்து இந்த படத்தை இயக்கினார் பாலா.

அப்பொழுது ஏற்பட்ட பிரச்சனையும் திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டது.  தற்பொழுது’ நான் கடவுள்’ படத்துக்காக நடிகர் அஜித்தை வைத்து ஷூட் செய்யப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி படுவைரலாகி வருகிறது . இப்புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ‘அப்படி என்றால் அஜித் நான் கடவுள் படத்தில் நடிக்க இருந்தது உண்மைதானா?’ என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.