தென்னிந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் தற்பொழுது விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.
அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா, பிரியா பவானி ஷங்கர் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. வில்லனாக நடிகர் ஆரவ் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டு வந்தது. இப்படத்தில் நடிக்க நடிகர் அஜித்துக்கு 105 கோடி சம்பளமாக பேசப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. இப்படத்தின் தலைப்பை விடாமுயற்சி என்று வைத்தாலும் படத்திற்காக ஒரு முயற்சி கூட எடுக்கவில்லை என்று ரசிகர்கள் ஒரு பக்கம் கதறி வந்தனர்.
இந்நிலையில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் தற்பொழுது விடாமுயற்சி ஷூட்டிங் அஜர்பைஜானில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடிகர் அஜித் கடந்த சில வருடங்களாகவே தொடர்ந்து ஆக்ஷன் படங்களில்தான் நடித்துவருகிறார். நடிகர் அஜித்தை முழுக்க முழுக்க ஆக்ஷன் ஹீரோவாக ரசிகர்களுக்கு காட்டிய படம் என்றால் அது அமர்க்களம் படம்தான். இயக்குனர் சரண் இயக்கத்தில் 1999ல் வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் தான் ‘அமர்க்களம்’.
இத்திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இயக்குநர் சரணுக்கு அஜித் கொடுத்த சர்ப்ரைஸ் பற்றிய சுவாரசியமான தகவல்கள் தான் தற்பொழுது இணையத்தில் வெளிவந்துள்ளது. அதாவது இயக்குனர் சரண் எப்போதும் பைக்கில்தான் ஷூட்டிங்கிற்கு வந்துள்ளார். இதைப்பார்த்த அஜித் ஒரு நாள் அவரது பைக்கை எடுத்து ஒளித்து வைத்து விட்டு அவருக்கு மாருதி கார் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார். இத்தகவலை செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இதனை கேள்விப்பட்ட தல ரசிகர்கள் ‘தல எப்பவுமே தல தான்’ என்று கொண்டாடி வருகின்றனர்.
லூதியானாவில் சினிமா பாணியில் நடந்த கார் திருட்டுச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் சமீபகாலமாக கார்…
மயிலாப்பூர் திமுக வேட்பாளர் த.வேலுவின் நேர்முக உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை…
கல்வித் தகுதியும், கைநிறையச் சம்பளமும் ஒரு மனிதனின் சமூக அந்தஸ்தை உயர்த்திவிடலாம், ஆனால் அவை அந்த மனிதனின் சிந்தனைப் போக்கை…
கேரள மாநிலம் திருச்சூர் அருகே நள்ளிரவில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 8 வயது சிறுவன் ஆல்ஜோ, பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம்…
கோவை தேர்தல் களம் தற்போது உச்சக்கட்ட அரசியல் பரபரப்பில் தகித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, கோவை தெற்கு தொகுதியில் திமுகவினர் வாக்காளர்களுக்குப்…
உலகளாவிய எரிசக்தி விநியோகத்தின் இதயத் துடிப்பாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz) கப்பல் போக்குவரத்தை மீட்டெடுப்பது குறித்து…