Categories: சினிமா

என்னை வச்சிகிட்டு நீ மதுரைல ஷூட் பண்ணவே முடியாது.. இயக்குனரிடம் சொன்ன அஜித்- என்ன காரணம்?

Spread the love

என்னை வச்சிகிட்டு நீ மதுரைல ஷூட் பண்ணவே முடியாது.. இயக்குனரிடம் சொன்ன அஜித்- என்ன காரணம்?

பிரபல நடிகரான சிங்கம் புலி மாயாண்டி குடும்பத்தார், மனம் கொத்தி பறவை, தேசிங்குராஜா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படங்களில் இவரது எதார்த்தமான நடிப்பு ரசிகர்களை சிரிக்க வைக்கும் விதமாக இருக்கும். அவரின் வித்தியாசமான மாடுலேஷனும் உடல்மொழியும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

அதையடுத்து அவர் இதுவரை 130க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்திருப்பார். இவர் வெறும் நடிகராக மட்டுமில்லாமல் ஒரு இயக்குனராகவும் இரண்டு படங்களை இயக்கியுள்ளார். அஜித்தை வைத்து ‘ரெட்’ மற்றும் சூர்யாவை வைத்து ‘மாயாவி’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இந்த இரண்டு படங்களுமே பெரிதாக ஓடாததால் அவர் நடிப்புப் பக்கம் தன்னை மடைமாற்றிக் கொண்டார்.

தொடர்ந்து நகைச்சுவை வேடங்களில் நடித்து வரும் சிங்கம் புலி சமீபத்தில் ரிலீஸாகியுள்ள ‘மகாராஜா’ திரைப்படத்தில் பெண் சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்யும் ஒருவராக நடித்து அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார். இதுவரை அவரைப் பற்றி இருந்த காமெடியான வெகுளி இமேஜை இந்த கதாபாத்திரம் மொத்தமாக உடைத்துள்ளது.

இளம் சினிமா ரசிகர்கள் பலருக்கும் சிங்கம்புலி வெறும் நகைச்சுவை நடிகராக மட்டுமே தெரிவார். ஆனால் அவர் இரண்டு படங்களை இயக்கியுள்ளார் என்பது பலரும் அறியாது. அஜித்தின் ‘ரெட்’ மற்றும் சூர்யாவின் ‘மாயாவி’ ஆகிய இரண்டும் அவர் இயக்கிய படங்கள்தான். ஆனால் அந்த இரு படங்களும் கமர்ஷியலாக வெற்றி பெறவில்லை என்பதால் அவர் நடிகராக தன்னுடைய பாதையை மாற்றிக் கொண்டார்.

இந்நிலையில் ரெட் படத்தின் போது நடந்த ஒரு சம்பவத்தை அவர் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார். அதில் “அஜித்தை வைத்து ரெட் படத்தை நான் மதுரையில்தான் ஷூட் பண்ணவேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அவரைப் பார்த்ததுமே ரசிகர்கள் அவரை கையைப் பிடித்து இழுத்து கிள்ளி வைத்து விட்டார்கள். இதனால் அவர் “என்னை வச்சிகிட்டு கண்டிப்பாக உன்னால் மதுரையில் இந்த படத்தை எடுக்க முடியாது. வேறு எங்காவது செட் போட்டு எடுத்துக் கொள்ளலாம்” என சொல்லிவிட்டார். அதனால் செட் போட்டு எடுத்தோம். அது கூட அந்த படத்தின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தது” எனக் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

பஞ்சர் கடைக்காரருக்கு ₹100 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்… லோன் வாங்க ஆவணம் கொடுத்தவருக்கு நேர்ந்த அதிர்ச்சி…!!

உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…

3 மணத்தியாலங்கள் ago

BREAKING: எந்த கூட்டணியில் இல்லை… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி…!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…

3 மணத்தியாலங்கள் ago

பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS… 3 நாட்கள் விடுமுறை… அரசு வெளியிட்ட உத்தரவு…!!

மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…

3 மணத்தியாலங்கள் ago

“வெறும் 50 ரூபாய் தக்காளி சண்டை” வீடுபுகுந்து கஸ்டமரின் மண்டையை உடைத்த கடைக்காரர்… வெளியான பகீர் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…

3 மணத்தியாலங்கள் ago

“அரசு சம்பளத்துல சுகமான தூக்கம்…!” பாட்னா சந்திப்பில் அரங்கேறிய கூத்து… நெட்டிசன்கள் ஆக்ரோஷம்… அலறியடித்து ஓடிவந்த இரயில்வே நிர்வாகம்…!!

பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…

3 மணத்தியாலங்கள் ago

முதல்வர் விஜய்யை அன்ஃபாலோ செய்த த்ரிஷா… நடந்தது என்ன…? இணையத்தில் விவாதத்தை கிளப்பும் நெட்டிசென்கள்…!!

சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…

3 மணத்தியாலங்கள் ago