Categories: சினிமா

ஷங்கர் கேட்டும் அவர் படத்தில் நடிக்க மறுத்த அஜித்… அதுக்கு அவர் சொன்ன காரணம்தான் ஹைலைட்டே!

Spread the love

தமிழ் சினிமாவில் இன்று வசூல் மன்னன்களாக திகழ்ந்து வருபவர்களில் ஒருவர் அஜித். அவருக்கென வெறித்தனமான லட்சக் கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் படம் ரிலீஸ் ஆகும் நாட்களில் தியேட்டர்கள் திருவிழா கோலம் கொள்கின்றன.

இப்படி வெறித்தனமான ரசிகர்கள் இருந்தும் அவர் 10 ஆண்டுகளுக்கு முன்பாக தன்னுடைய ஆயிரக் கணக்கான ரசிகர் மன்றங்களைக் கலைத்தார். இதற்கு அவர் சொன்ன காரணம் ரசிகர்கள் தங்கள் குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். தேவையில்லாமல் என் பெயரில் அவர்கள் நேரத்தை வீணடிக்கவேண்டியதில்லை. குடும்பத்தைக் கவனித்துக் கொண்ட பிறகு நேரம் கிடைத்தால் படத்தைப் பார்த்து ரசிக்கட்டும் என்றார்.

இப்போது ஆக்‌ஷன் ஹீரோவாக வலம் வந்தாலும் அஜித், ஆரம்பத்தில் பல ரொமாண்டிக் எமோஷனல் படங்களில் நடித்துள்ளார். தீனா படத்துக்குப் பிறகு முழு ஆக்‌ஷன் ஹீரோவானார். அதன் பிறகு அவர் மாஸ் நாளுக்கு நாள் அதிகமாகியது. ஆனாலும் அஜித் மணிரத்னம், ஷங்கர் போன்ற முன்னணி இயக்குனர்களின் இயக்கத்தில் நடிக்கவேயில்லை.

அதற்கு அஜித்தின் விட்டேத்தியான குணாம்சம்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. அஜித், விக்ரம் சூர்யா போல ஒரு படத்துக்காக தன்னைக் கடுமையாக வருத்திக் கொண்டு முழு ஈடுபாட்டுடன் நடிக்கக் கூடிய நடிகர் இல்லை. மிகவும் எளிதாக அதிகம் மெனக்கெடாத கதாபாத்திரங்கள் கொண்ட படங்களில்தான் நடிப்பார்.

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் இயக்குனர் ஷங்கரே அஜித்துக்கு போன் செய்து நாம் இருவரும் சேர்ந்து ஒரு படம் பண்ணலாம் என கேட்டாராம். ஆனால் அஜித்தோ “வேணாம் சார். உங்கள் படங்களின் கதாபாத்திரத்துக்கு என்று நீங்கள் ஒரு பிம்பத்தை உருவாக்கி வைத்துள்ளீர்கள். ஆனால் அதுபோல நான் நடிப்பதில்லை. நாம் இருவரும் நண்பர்களாகவே இருப்போம்” எனக் கூறிவிட்டதாக சினிமா பத்திரிக்கையாளர் வலைப்பேச்சு அந்தணன் தெரிவித்துள்ளார்.

மேலும் அது ஒரு நல்ல முடிவுதான் என்றும் அவர் கூறியுள்ளார். ஏனென்றால் நடிகர்களில் ஈகோ அதிகமாகப் பார்ப்பவர் அஜித், அதே போல ஷங்கரும் ஈகோ உள்ள இயக்குனர், அதனால் அவர்கள் ஒரு படத்தில் இணைந்தால் கண்டிப்பாக படத்தில் பல பிரச்சனைகள் வந்திருக்கும் எனவும் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

இண்டிகோ விமானத்தில் திடீர் தீ விபத்து.. பவர்பேங்கால் வந்த வினை.. நடுவானில் அலறிய பயணிகள்.. பெரும் பரபரப்பு..!

டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்தில் (6E-2131), விமானம் ஓடுதளத்தில் நகர்ந்து கொண்டிருந்தபோது ஒரு பயணியின் கைப்பையில்…

7 மணத்தியாலங்கள் ago

“யாரும் அழக்கூடாது” கொளத்தூரில் ஸ்டாலினை கண்டதும் நடந்த சம்பவம்… பார்த்ததும் கதறிய சேகர் பாபு… வைரலாகும் வீடியோ..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சென்னை கொளத்தூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்கும்…

8 மணத்தியாலங்கள் ago

விஜய் அமைச்சரவையில் 20 அமைச்சர்கள்..? செங்கோட்டையன் முதல் ராஜ்மோகன் வரை.. லிஸ்டில் இருக்கும் அந்த முக்கிய பெயர்கள்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியை…

8 மணத்தியாலங்கள் ago

நடிகர் ஜீவாவின் தந்தை கார் விபத்தில் சிக்கி உயிரிழப்பு… அதிர்ச்சியில் திரையுலகம்..!!

பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி திரையுலகினரிடையே பெரும்…

8 மணத்தியாலங்கள் ago

ஸ்டாலின் தோல்வியால் வருத்தத்தில் விஜய்… ஸ்டாலின் மீது இருக்கும் அந்தப் பாசம்… ஜோதிடர் ரதன் பண்டிட் உடைத்த ரகசியம்..!!!

தவெக தலைவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகக் கருதப்படும் ரதன் பண்டிட், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி அரசியல்…

8 மணத்தியாலங்கள் ago

கோட்டையை இழந்த சோகம்.. “அழாதீங்க தம்பி!”… தொண்டர்களைத் தேற்றிய ஸ்டாலின்… கொளத்தூரில் உருக்கமான சம்பவம்…!!!!

தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத மாபெரும் மாற்றமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108…

9 மணத்தியாலங்கள் ago