#image_title
1975 ஆம் ஆண்டு வெளியான அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ரஜினிகாந்த். அந்த படத்தில் ஒரு மிகச்சிறிய வேடமே அவருக்குக் கொடுக்கப்பட்டு இருந்தது. அதன் பிறகு மூன்று முடிச்சு உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லனாக நடித்து தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கினார்.
அபூர்வ ராகங்கள் படத்தில் ரஜினிகாந்த் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு சீக்கிரமே உயிரிழக்கப் போகும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு ரஜினியை சூப்பர் வில்லன் ஆக்கியது பாலச்சந்தர் இயக்கிய மூன்று முடிச்சு திரைப்படம். அதன் பிறகு ரஜினி தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் வில்லன் நடிகர் ஆனார்.
அதன் பின்னர் ஹீரோவாகி, தமிழ் சினிமாவின் ஏன் இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஆனார். அதன் பிறகு அவர் கமர்ஷியல் மாஸ் படங்களில் மட்டுமே நடிக்கத் தொடங்கினார். ஆனாலும் கமல் நடிக்கும் கிளாஸ் படங்களின் மேல் ரஜினிக்கு ஒரு ஆர்வம் எப்போதும் இருந்ததாம். நாயகன் படத்துக்குப் பிறகு ரஜினி தன்னுடைய படங்களில் சில விஷயங்களை சேர்க்க வேண்டும் என முடிவெடுத்தாராம்.
இதுபற்றி பேசியுள்ள ரஜினியின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவரான கே எஸ் ரவிக்குமார் “நாயகன் படத்தைப் பற்றி இப்போது வரைக்கும் பேசுகிறார்கள். ஆனால் மனிதன் படத்தைப் பற்றி யார் பேசுகிறார்கள். நாயகன் படத்தை ரஜினி சாரே எத்தனை முறை பார்த்திருப்பார். அதன் பிறகுதான் தன்னுடைய படங்கள் வெறும் கமர்ஷியல் படங்களாக இருக்கக் கூடாது எனமுடிவெடுத்து சில விசயங்களை சேர்க்க வேண்டும் என நினைத்தார்.
அதன் பிறகு தளபதி, அண்ணாமலை, பாட்ஷா, முத்து, படையப்பா ஆகிய படங்கள் வந்தன. அந்த படத்தில் ரஜினியின் நடிப்பு அதற்கு முந்தைய படங்களை விட சிறப்பாக இருக்கும்.” எனக் கூறியுள்ளார்.
டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்தில் (6E-2131), விமானம் ஓடுதளத்தில் நகர்ந்து கொண்டிருந்தபோது ஒரு பயணியின் கைப்பையில்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சென்னை கொளத்தூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்கும்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியை…
பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி திரையுலகினரிடையே பெரும்…
தவெக தலைவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகக் கருதப்படும் ரதன் பண்டிட், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி அரசியல்…
தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத மாபெரும் மாற்றமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108…