#image_title
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து, மக்கள் மனதில் குடி கொண்டவர் கேப்டன் விஜயகாந்த். தனது 71 வயதில் இன்று அவர் நம்மை விட்டு பிரிந்து நம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி சென்றுள்ளார். நடிகர் விஜயகாந்த் மதுரையில் 1952 இல் பிறந்தவர் விஜயராஜ் என்ற தனது பெயரை சினிமாவிற்காக விஜயகாந்த் என்று மாற்றிக் கொண்டார். சினிமா வாய்ப்புக்காக ஆரம்பத்தில் மிகவும் கஷ்டப்பட்ட இவர் 1979 இல் இனிக்கும் இளமை என்ற திரைப்படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானார்.
#image_title
இதை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளிவந்த அகல்விளக்கு, நீரோட்டம், தூரத்து இடி போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. சட்டம் ஒரு இருட்டறை ,வைதேகி காத்திருந்தாள், நானே ராஜா நானே மந்திரி, கேப்டன் பிரபாகரன், பூந்தோட்ட காவல்காரன் என்று இவர் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆன திரைப்படங்கள் எண்ணிலடங்காதவை. அந்த காலத்தில் முன்னணி நடிகர்களாக வலம் வந்த ரஜினிகாந்த், கமலஹாசனுக்கு டப் கொடுத்தவர் விஜயகாந்த். சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி கால் பதித்து கலக்கிய சிங்கம் தான் நம் கேப்டன்.
ஒரு சில ஆண்டுகளாகவே உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக் கொண்டு வந்த இவர், கொரோனா தொற்று காரணமாக மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு நேற்று இவ்வுலகை விட்டு பிரிந்தார். இந்நிலையில் இன்று மாலை 4.30 மணி அளவில் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திலேயே அரசு மரியாதையுடன் விஜயகாந்தின் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. நடிகர் விஜயகாந்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை அண்ணாசாலையில் உள்ள தீவுத்திடலில் வைக்கப்பட்டிருந்தது.
#image_title
சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் திரண்டு வந்தனர். நேற்று இரவு விஜய் அஞ்சலி செலுத்திய நிலையில் இன்று காலை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து இன்று இரவு 7 மணியளவில் அவரது உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கமும் செய்யப்பட்டு விட்டது. இந்த நிலையில், நடிகர் அஜித்குமார் தொலைப்பேசி வாயிலாக தொடர்பு கொண்டு விஜயகாந்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து உள்ளார். தற்பொழுது வெளிநாட்டில் சூட்டிங்கில் இருப்பதால் இறுதி அஞ்சலி செலுத்த வர முடியவில்லை எனக்கூறி பிரேமலதா மற்றும் சுதீஷிடம் தொலைபேசி வாயிலாக ஆறுதல் கூறினாராம் நடிகர் அஜித்.
ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…
டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…
சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…