தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி கொண்டிருக்கும் அஜித் நடிப்பில் கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி வெளியாகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் திரைப்படம் தான் விடாமுயற்சி. இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 1200 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டி வருகின்றது. இதனைத் தொடர்ந்து அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தை ஆதித் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள நிலையில் இந்த திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் பத்தாம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்தப் படத்தின் பணிகள் ஏறத்தாழ நிறைவடைந்துள்ள நிலையில் அஜீத் தற்போது கார் ரேசில் முழு கவனம் செலுத்தி வருகின்றார்.

கடந்த மாதம் துபாயில் நடந்த கார் பந்தயத்தில் கலந்து கொண்டு அவருடைய அணி மூன்றாவது இடத்தை பிடித்து அசத்தியது. இதனைத் தொடர்ந்து ஐரோப்பா கார் பந்தயத்தில் களமிறங்க அஜித் தற்போது தயாராகி வருகின்றார். இதனால் வருகின்ற அக்டோபர் மாதம் வரை நடிக்க மாட்டேன் என ஏற்கனவே அஜித்த அறிவித்திருந்தார். இருந்தாலும் அவர் அடுத்ததாக நடிக்க உள்ள ஏகே 64 படத்திற்கான கதையை தொடர்ந்து கேட்டு வருகிறார். அதன்படி அவருடைய ஏ கே 64 படத்தை இயக்க மகாராஜா பட இயக்குனர் நிதிலன், போர் தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா, கங்குவா இயக்குனர் சிறுத்தை சிவா, பில்லா பட இயக்குனர் விஷ்ணுவர்தன் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் கதை சொன்னதாக தெரிகிறது.

இதில் கார்த்திக் சுப்புராஜ் சொன்ன கதை அஜித்துக்கு மிகவும் பிடித்துப் போனதால் அவர்தான் ஏகே 64 படத்தின் இயக்குனராக இருக்க அதிக அளவில் வாய்ப்புள்ளதாக தெரிகிறது. தற்போது சூர்யாவின் ரெட்ரோ படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் நிலையில் இந்தத் திரைப்படம் மே மாதம் அஜித் பிறந்தநாள் அன்று வெளியாக உள்ளது. அன்றைய தினமே ஏகே 64 படத்தின் அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
