தமிழில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர்தான் நடிகை யாஷிகா ஆனந்த்.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து மணியார் குடும்பம், நோட்டா உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்தார்.
பிறகு இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
அதன் பிறகு அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த யாஷிகா கடந்த 2021 ஆம் ஆண்டு கார் விபத்தில் சிக்கினார்.
இந்த விபத்தில் காயங்களுடன் உயிர் தப்பியை இவர் பல மாதங்களுக்குப் பிறகு அதிலிருந்து மீண்டு வந்தார். தற்போது இவர் பல திரைப்படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
ஏற்கனவே எஸ்கே சூர்யாவுக்கு ஜோடியாக கடமை செய் என்ற திரைப்படத்தில் நாயகியாக யாஷிகா நடித்திருந்தார்.
மாடல் அழகியான யாஷிகா ஆனந்த் தற்போது, இவன் தான் உத்தமன், ராஜ பீமன் படத்திலும் மேலும் இரண்டு படங்களை கைவசம் வைத்துக்கொண்டு நடித்து வருகிறார்.
சினிமாவில் பிஸியாக இருந்தாலும் மறுபக்கம் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா ரசிகர்களை கவரும் வகையில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோவர்ஸ் வைத்திருக்கும் யாஷிகா தற்போது ஓவர் கிளாமர் காட்டி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.