2025-ல் அஜித் தான் பெஸ்ட்…! விருது வழங்கும் விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற “தல”… வைரலாகும் புகைப்படம்…!!

By Devi Ramu on கார்த்திகை 23, 2025

Spread the love

திரைப்பட நடிகர் அஜித்குமார், நடிப்பு மட்டுமின்றி கார் பந்தயம் மற்றும் பைக் ரைடிங்கிலும் அதிக ஆர்வம் கொண்டவர். 2025ஆம் ஆண்டின் தொடக்கத்தில், அவர் தனது சொந்தக் கார் ரேஸ் அணியான அஜித் குமார் ரேஸிங் குழுவை உலகின் பல பகுதிகளில் நடந்த ரேஸ் பந்தயங்களில் களமிறக்கி, பரிசுகள் வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்தார். அவரது ரேஸ் அணி, இதுவரை இரண்டு முறை மூன்றாவது இடத்தையும், ஒருமுறை இரண்டாவது இடத்தையும் 24 மணி நேரம் மற்றும் 12 மணி நேரப் பந்தயங்களில் வென்றுள்ளது.

இந்த நிலையில், 2025ஆம் ஆண்டுக்கான சிறந்த ஜென்டில்மேன் டிரைவர் விருது  இத்தாலியில் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இத்தாலியின் வெனிஸில், தொழில்முனைவோர் மற்றும் கார் ரேஸருமான மறைந்த பிலிப் சாரியோலின் நினைவாக, நடிகர் மற்றும் ரேஸருமான அஜித்குமாருக்கு இந்த உயரிய விருது அளிக்கப்பட்டுள்ளது. இந்த விருதைப் பெறுவதற்காக அஜித் தனது குடும்பத்துடன் இத்தாலிக்குச் சென்றுள்ளார். அஜித்தின் மனைவி ஷாலினி இந்த மகிழ்ச்சியான தருணத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் அஜித்குமாருக்கும் அவரது அணிக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.