சிவாஜி கணேசனோடு அஜித் இணைந்து நடிக்க வந்த ஒரே ஒரு வாய்ப்பு… எந்த படம்னு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

By vinoth

Published on:

தமிழ் சினிமாவில் இன்று வசூல் மன்னன்களாக திகழ்ந்து வருபவர்களில் ஒருவர் அஜித். அஜித் தனது ஆரம்ப காலகட்டங்களில் வெற்றிக்காக போராடிக் கொண்டிருந்த போது அவருக்கு வெற்றி படத்தைக் கொடுத்தவர் இயக்குனர் வசந்த். அவர் இயக்கிய ஆசை திரைப்படம்தான் அஜித்தின் முதல் சூப்பர்ஹிட் படமாக அமைந்தது.

அதன் பிறகு காதல் மன்னன், வாலி, அமர்க்களம் மற்றும் முகவரி என அடுத்தடுத்து ஹிட் படங்களாகக் கொடுத்து முன்னணி நடிகராக உயர்ந்தார். ஆனால் அவரை ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக்கியது முருகதாஸின் தீனா திரைப்படம்தான். அந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் பின்னர் ஆக்‌ஷன் பாதையில் அஜித் பயணப்பட்டார்.

   

அஜித் வளர்ந்து வந்த காலகட்டத்தில் சிவாஜி கணேசன் அதிகளவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். அதனால் விஜய் போன்ற இளம் கதாநாயகர்களோடு படங்களில் நடித்தார். ஆனால் அஜித் கூட நடிக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை.

ஆனால் ஒரே ஒரு முறை அஜித்தும் சிவாஜி கணேசனும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கும் வாய்ப்பு அமைந்து அது நடக்காமல் போனது. இயக்குனர் ஏ வெங்கடேஷ் விஷாலின் அண்ணன் அஜய்யை வைத்து பூப்பறிக்க வருகிறோம் என்ற படத்தை இயக்கும் முனைப்பில் இருந்துள்ளார். அந்த படத்தில் சிவாஜி கணேசன் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்தார். இந்த படத்தை விஷாலின் தந்தை ஜி கே ரெட்டியே தயாரிப்பதாக இருந்தது.

இந்த படத்துக்காக முன் தயாரிப்புப் பணிகள் நடந்துகொண்டிருக்கும்போதே, தயாரிப்பாளர் சி.வி.ராஜேந்திரன் வந்து ஏ,வெங்கடேஷை சந்தித்து இந்த படத்தை அஜித்தை வைத்து எடுக்கலாம். நானே தயாரிக்கிறேன் என்று கூறியுள்ளார். நானே அஜித்தின் கால்ஷூட்டை வாங்கி தருவதாக கூறுகிறார். அஜித்தை வைத்து எடுத்தால் படத்துக்கு ஒரு நல்ல ரீச் கிடைக்கும் என ஏ வெங்கடேஷ் யோசித்துள்ளார்.

ஆனால் தன்னுடைய முதல் படத்தை தயாரித்த ஜி கே ரெட்டிக்குக் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அந்த வாய்ப்பை நிராகரித்துவிட்டாராம். அதனால் அஜித் மற்றும் சிவாஜி கணேசன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கடைசி வரை கைகூடாமல் போயுள்ளது.